Friday, January 22, 2021

விருச்சிகம்: 2021 பிப்ரவரி மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

விருச்சிகம்:

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி நிலையில் வலிமையுடன் இருப்பதால் விருச்சிகத்திற்கு நன்மைகள் நடக்கும் மாதம் இது. செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் ராசியைப் பார்ப்பதால் விருச்சிக ராசிக்காரர்களின் சிலர் இந்த மாதம் ரகசியமான வேலைகளை செய்து அதில் வெற்றி பெறுவீர்கள். மனதில் இருப்பதை பிறருக்கு காட்டாமல் வேலைகளை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்படுகின்ற மாதம் இது. உங்கள் செயல்களின் மூலம் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வெற்றி கொள்வீர்கள். பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

குரு, சனி இணைவதால் பணக் கஷ்டங்கள் இருக்காது. வெகுநாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் தற்பொழுது  முடியும். வேற்றுமத நண்பர்கள் இப்போது கை கொடுப்பார்கள். தெய்வதரிசனம் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். ஐந்தாமிடம் நீச்ச பங்க வலுப் பெறுவதால் பிள்ளைகள் உங்களுக்கு பெருமை தேடித் தருவார்கள். பிள்ளைகளுக்குரிய கடமைகளை நீங்கள் சரியாக செய்ய முடியும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். சிலருக்கு பழைய கடனை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டியிருக்கும்.

வியாபாரிகள் மேன்மை அடைவார்கள். அரசியல்வாதிகளுக்கு  முன்னேற்றமான திருப்பங்கள் நடக்கும். பெண்களை மேலதிகாரியாக கொண்டவர்களுக்கு அவர்கள் மூலம் நன்மை உண்டு. இதுவரை வேலை, தொழில் விஷயங்களில் செட்டில் ஆகாமல் இருப்பவர்கள் ஆறு மாதங்களில் நன்றாக இருக்கப் போவதற்கான அச்சாரம் போடுகின்ற மாதம் இது. வாக்குஸ்தானம் வலுப் பெறுவதால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் நல்ல மாற்றங்கள் நடக்கும்.

2,3,8,9,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ம் தேதி இரவு 9.55 முதல் 24-ம்தேதி காலை 7.10 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment