கைப்பேசி : +91 8286 99 8888
துலாம்:
மாத ஆரம்பத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் ராசியை பார்ப்பதால் துலாம் ராசிக் காரர்களுக்கு கோபத்தை உருவாக்கக் கூடிய நிகழ்வுகள் நடக்கும். எவ்வளவு நிதானமானவராக இருந்தாலும் கூட பொறுமையைக் கைவிடச் செய்யும் அளவிற்கு வம்புக்கு இழுக்கும் சம்பவங்களை சுற்றி இருப்பவர்கள் செய்வார்கள் என்பதால் துலாத்தினர் பேச்சிலும், செயலிலும் நிதானனமாக இருக்க வேண்டிய மாதம் இது. இது தவிர்த்து வேலை, தொழிலில் வேறு எந்தவித தொந்தரவுகளும் இருக்காது. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பது யோகம் எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் துலாத்தினர் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.
ராசிநாதன் வலுப்பெறுவதால் பிப்ரவரி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதம்தான்.
குறிப்பாக இந்த மாதத்தை உங்களின் கடன்களும், நோய்களும் தீரும் மாதம்
என்று சொல்லுவேன். ராசினாதனே எட்டுக்குடையவனாகி சுப வலு பெறுவது கடனையும், நோயையும் விலக்கி வைக்கும் அமைப்பு என்பதால் கடன்களை நினைத்து கலக்கத்தில் இருப்பவர்களுக்கு
சந்தோஷம் தரும் மாதம் இது. சிலருக்கு வெகுநாள் இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள்
முடிவடைந்து பணவரவு உண்டு.
சகோதர உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடுகள் நீங்கி
பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். தொழில் விரிவாக்கங்கள் பலன்
தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். சிலருக்கு
வெளிமாநில அல்லது வெளிநாட்டு பயணங்களும், இட மாறுதல்களும்
இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அப்பாவால் செலவுகள் இருக்கும். வயது முதிர்ந்த
ஆரோக்கியக் குறைவுள்ள தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கவும்.
வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். தாயார் வழி நன்மைகள் உண்டு
பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங்,
வாகனங்கள், வாடகை, கலைத்துறை,
டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம்
வரும்.
1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 19-ம் தேதி காலை 9.40 முதல் 21-ம் தேதி இரவு 9.55 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும்
எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால்
எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய
வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment