கைப்பேசி : +91 8286 99 8888
தனுசு:
ராசிநாதன் குருவும் யோகாதிபதி செவ்வாயும் வலுவாக உள்ளதால் தனுசுக்கு அதிர்ஷ்டம் ஆரம்பிக்கும் மாதம் இது. அதிர்ஷ்டமான வார்த்தைகளையே சமீப காலமாக நான் தனுசு ராசிக்கு எழுதவில்லை. தனுசின் முன்னேற்றங்கள் ஆரம்பிக்க இருக்கும் மாதம் இது. ஏழரைச் சனியினால் இதுவரை நடந்த எதிர்மறை பலன்கள் யாவும் விலகிக் கொண்டிருப்பதை இனி நீங்கள் உணர முடியும். இனிமேல் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும். 2021-ம் வருடம் உங்கள் வருடமாக இருக்கும். எதிலும் ஜெயிப்பீர்கள். கவலை வேண்டாம்.
எனக்கு ஒன்றும்
சரியாக நடக்கவில்லையே என்று மனதிற்குள் குழம்பி கொண்டிருப்பவர்கள் கூட முயற்சிகளை
செய்து வெற்றி காணும் மாதம் இது. குருபகவான் இரண்டில்
இருப்பதால் உங்களில் சிலருக்கு சுப காரியங்கள் நடைபெற முன்னேற்பாடுகள் உண்டு. சிலர்
திருமணம் நடக்கப் பெறுவீர்கள். அல்லது வாழ்க்கைத் துணையை அடையாளம் காணும்
நிகழ்ச்சியாவது இந்த மாதம் இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று
கூடுவீர்கள். நீண்டநாள் பார்க்காத நண்பர்கள் உறவினர்களை இந்த மாதம் பார்த்து மனம்
மகிழ உரையாடுவீர்கள். புதிய வீடு வாங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டை மேம்படுத்துவீர்கள்
புதிய நல்ல வாகனம் அமையும். வசதிக்குறைவான வீட்டில் இருப்பவர்கள் வசதியான
வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வழக்குகள் உங்கள்
பக்கம் தீர்ப்பாகும். பிரச்சினைகள் எதுவும் கிட்டே வராது. எதிலும் வெற்றி
கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களும் வலிய வந்து உதவுவார்கள்.
மாத முற்பகுதியில் சூரியனும் சந்திரனும் வலுவாக இருப்பது தொழில் வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளுக்கு நல்ல பலனை அளிக்கும். கேது வலுப் பெறுவதால்
ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத் தலங்களை தரிசிக்கும்
வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ
வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக் கடன் செலுத்தாதவர்கள் அவற்றை முடிப்பீர்கள்.
தனுசு இனிமேல் எதையும் சாதிக்கும் என்பதை நிரூபிக்கும் மாதம் இது.
1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம் தேதி காலை 7.10 முதல் 26-ம் தேதி மதியம் 12.35 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும்,
புதிய முயற்சிகளையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது
போன்ற விஷயங்களையும் இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment