கைப்பேசி : +91 8286 99 8888
மகரம்:
ராசிநாதன் சனியும், சுபாரான குருவும் ராசியிலேயே இணைந்திருப்பதும், மாத ஆரம்பத்தில் யோகாதிபதிகள் சுக்கிரனும், புதனும் வலுவாக அமைவதும் மகரத்திற்கு சிறப்பான அமைப்பு என்பதால் பிப்ரவரி மாதம் உங்கள் வேதனைகளை விலக்கி முன்னேற்ற படிகளில் ஏற வைக்கும் மாதமாக இருக்கும். கடந்த சில மாதங்களாக எல்லா வகையிலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைகளுக்கான அடிப்படைகள் ஆரம்பமாகும் மாதம் இது. . குரு, சனி சுபத்துவ இணைவால் இந்த மாதம் உங்களுக்கு எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லாத வண்ணம் சாதகமான, சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும் என்பது உறுதி.
ஜென்மச் சனி நடந்து கொண்டிருந்தாலும்
சனி சுபத்துவமாக இருப்பதால் கடந்த வருடம் இருந்த துயரங்கள் எதுவும் இனிமேல்
உங்களுக்கு இருக்காது. வருங்காலம் இனிமையாக இருக்கப் போகிறது. இனியெல்லாம்
சுகம்தான். இனிமேல் உங்கள் வாழ்க்கையில் கெடுதல்கள் எதுவும் இன்றி அனைத்தும் கையை
மீறிப் போகாமல் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இளையவர்களுக்கு கடந்த
காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இனிமேல் இருக்காது. புதியதாக எந்தப் பிரச்னையும்
வராது. இருக்கும் பிரச்னைகளும் தீருவதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு
வழி திறக்கும். இனிமேல் கஷ்டங்கள் வர காரணங்கள் இல்லை. வாழ்க்கைத் துணை மூலம்
நன்மைகள் இருக்கும். சிலருக்கு துணை அமைவதற்கான ஆரம்பம் உண்டு. மனம் படிப்படியாக
லேசாவதற்கான சம்பவங்கள் நடக்கும்.
கடன் தொல்லையால்
கலங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. மேலதிகாரிகள்
தொந்தரவுகள் இனிமேல் இருக்காது. வேலைப்பளு கம்மியாக இருக்கும். பணவரவிற்கு
குறையில்லை. தேவைப்படும் உதவிகள் சரியான சமயத்தில் கிடைக்கும். வேலை,
தொழில் போன்ற வருமானம் வரும் அமைப்புகளில் நல்ல பலன்களை
பெறுவீர்கள். குறிப்பாக ராகு தசை, ராகு புக்தி
நடப்பவர்களுக்கு இந்த மாதம் எதிர்பாராத பண வரவு இருக்கும். தொழில் துறையினருக்கு
தடைகள் நீங்கி,
தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள்.
4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம் தேதி மதியம் 12.35 முதல் 28-ம் தேதி மதியம் 3.07 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த
நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு
நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது
நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment