Wednesday, August 26, 2020

கன்னி: 2020 செப்டம்பர் மாத ராசி பலன்கள்


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

கன்னி: 

செப்டம்பர் மாதம் பாதிநாள் வரை கன்னி நாதன் புதன் அதிநட்பு நிலையில் நண்பர் சூரியனுடனும்  அதன்பின் ராசியில் உச்ச நிலையிலும் இருக்கிறார். ராசிநாதன் வலுவாக இருப்பதால் உங்கள் சிந்தனை, செயல்திறன், ஆக்கம், ஊக்கம் அனைத்தும் சிறப்பான நிலையில் இருக்கும். சாதனைகள் புரிய முடியும். இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதுத் தொழில் தொடங்கலாம்.  செய்யும் தொழில் சிறப்பாக நடக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். நான்கில் குரு இருப்பதால் வீடு, வாகனம், தாயார் போன்ற விஷயங்களில் நன்மைகள் நடக்கும். 

இந்தமாதம் கன்னிக்கு கெடுதலாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை. பாபக் கிரகங்களான கேது, சனி ஆகியோர் நான்கு, ஐந்தில் இருந்தாலும் கேது குருவின் வீட்டில் இருப்பது நன்மைகளைத் தரும் என்பதால் இது பிரச்னைகளைத் தீர்க்கும் மாதம் என்பதோடு புதிதாக எந்த பிரச்னையும் வராத மாதமாகவும் இருக்கும். சுக்கிரன் பனிரெண்டில் இருப்பதால் மாணவர்களுக்கு பெண்கள் சம்பந்தப்பட்ட ஜாலியான அனுபவங்கள் இருக்கும். படிப்பைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்யவீர்கள். பெண்களுக்கு இது அற்புதமான மாதமாகும். ஆண்கள் உங்களுக்கு அடங்கி நடப்பார்கள். இதுநாள் வரை தொந்தரவு கொடுத்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமானவர் அந்த இடத்திற்கு வருவார். 

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக சம்பாதிப்பீர்கள். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலை விஷயத்தில் நல்ல தகவல்கள் உண்டு. திறமையை முதலீடாக வைத்து சம்பாதிப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். உங்களில் அஸ்தம்  நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள் என்பதால் இந்த மாதம் முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். வெகுநாட்கள் திருமணம் தாமதமான குழந்தைகளுக்கு திருமணம் உறுதியாகும். செப்டெம்பர் மாதம் சிலருக்கு திருப்பங்களைக் கொடுக்கும் என்பதால் இந்த மாதம் நல்ல மாதமே.

1,4,5,6,7,8,20,21,22,28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ந்தேதி அதிகாலை 2.21 மணி முதல் 8-ந்தேதி பகல் 3.10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல் எதுவும் நடக்காது. இருந்தாலும் நீண்ட தூர பிரயாணங்கள் புதிதாக தொழில் ஆரம்பித்தல், முக்கிய முடிவுகள் எதுவும் எடுத்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

1 comment :

  1. Astrologer is the way which can overcome all hurdle in a life and gives best and easiest solution for it. Sometime it's not possible to choose, who is best among all astrologers. But, can find best astrologer in Bangalore which gives a way to reduce all problems in life. Searching for Best Astrologer in Bangalore People trust on Sai Balaji Anugraha

    Best Astrologer Bangalore

    ReplyDelete