கைப்பேசி : +91 9768 99 8888
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களின் உற்சாகமும், திறந்தமனதும், நேர்மையான போக்கும், எதையும் அலட்சியமாக சமாளிக்கும் உறுதியும் இந்த மாதம் வெளிப்படும். ரிஷபத்திற்கு இனி கிரகநிலைகள் நன்றாக அமைய இருக்கின்றன. நல்ல சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் ஓரிரு முறைதான் வந்து கதவை தட்டும் என்பதால் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் இப்போது நீங்கள் சுறுசுறுப்புடன் செயலாற்றினால் வெற்றி நிச்சயம். அடுத்து நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் குரு ஒன்பதாமிடத்திற்கு மாறி உங்களின் ராசியைப் பார்க்கப் போவதால் உங்களின் நல்லநேரம் இந்த மாதத்திலிருந்தே ஆரம்பமாகும். ராசிநாதன் சுக்கிரனும் பலம் பெறுவதால் மாதம் முழுவதும் உங்களிடம் சரளமான பணப்புழக்கம் இருக்கும். எந்தப் பிரச்னையும் எல்லை மீறி போகாது. அனைத்தையும் உங்களால் சமாளிக்க முடியும்.
ஐந்துக்குடைய புதன் உச்சம் பெறுவதால் பிள்ளைகள் விஷயத்தில் மனக்கவலைகள், விரயங்கள், சங்கடங்கள் இருந்தவர்களுக்கு தற்போது அவர்கள் மூலம் நல்லவைகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளால் தொந்தரவுகள் இருக்காது. நடுத்தர வயதை கடந்தவர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். என்ன இருந்தாலும் பணப் பற்றாக்குறை வராது என்பதால் வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் செய்து விடுவீர்கள். சிலருக்கு நீண்ட தூரப் பிரயாணங்கள் இந்த மாதம் உண்டு.
வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும். யாராவது ஒருவர் கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். பொதுவில் இது சிறப்பான மாதம்தான்.
1,2,4,5,6,11,18,19,20,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ந்தேதி மாலை 6.25 மணி முதல் 26-ந்தேதி அதிகாலை 12.41 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் தூரப் பிரயாணங்களை தவிர்க்கலாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்திக் கொள்வதும் இந்த நாட்களில் வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
Thank you for sharing and please keep update like this type of article because i want to learn more relevant to this topic. Searching for Best Astrologer in Bangalore People trust on Sai Balaji Anugraha
ReplyDeleteBest Astrologer Bangalore