துலாம்:
ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் வலிமையான அமைப்பில் இருப்பதால் துலாத்தினர் அனைவரும் தங்களுடைய வயதிற்கு ஏற்றார்போல நன்மைகளை அனுபவிக்கும் மாதம் இது. மாத ஆரம்பத்தில் சுக்கிரன் உச்சமாக இருப்பதும், பிற்பகுதி முழுவதும் ராசியைப் பார்க்கும் நிலையில் இருப்பதும் துலாம் ராசிக்கு நல்லவைகளை மட்டுமே செய்யக் கூடிய அமைப்பு. தனஸ்தானமாகிய இரண்டாமிடத்திற்கு குரு திரும்பி வந்து விட்டபடியால், கடந்த சில வாரங்களாக பொருளாதார பிரச்சினைகளை சந்தித்தவர்கள் கூட மே மாதம் கஷ்டங்கள் நீங்கி வேலை, தொழில் அமைப்புகளில் சந்தோஷமாக இருப்பீர்கள்.
எப்போதோ ஒருமுறை மட்டுமே நன்றாக அமையக்கூடிய இரண்டில் குரு. 3-ல் சனி, கேது போன்ற யோகக் கிரக அமைப்புகள் தற்போது துலாம் ராசிக்கு இருப்பதால் துலாத்தினர் துன்பங்கள் என்றால் என்னவென்று கேட்கும் மாதம் இது. ஒரு குறிப்பிட்ட பலனாக பணம் கொடுத்து வாங்குவதில் சிக்கல்கள் தோன்றி பணத்தையும், நட்பையும் இழந்து, ஏண்டா கொடுத்தோம் என்று யோசிக்கும் அளவிற்கு சம்பவங்கள் நடந்தவர்களுக்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் மாதம் இது. ராசிநாதன் சுக்கிரன் உச்சமாக இருப்பது யோகம் என்பதால் எது நடந்தாலும் மன தைரியத்துடன் சமாளிப்பீர்கள்.
பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். நீண்டநாள் நினைத்திருந்த ஒரு காரியம் சாதகமாக நடைபெறும். கலைஞர்கள், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், விவசாயிகள், தனியார் துறையினர், தொழில் அதிபர்கள் போன்ற அனைவருக்கும் இது நல்ல மாதம். பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகி உங்கள் பங்கு கிடைக்கும். யோகாதிபதியான புதன் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும் மிக நல்ல அமைப்பு. புதனால் வருமானம் உண்டு. பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் ராகுவால் உங்களில் சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்களால் ஆதரவும் தகுந்த நேரத்தில் உதவியும் கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு. பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும்.
2,5,11,19,20,21,22,24,25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 5 ம் தேதி இரவு 10.29 மணி முதல் 8ம் தேதி அதிகாலை 4.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment