கன்னி:
கன்னி நாதன் புதன் மாத ஆரம்பத்தில் நீச நிலையில் இருந்தாலும், அவருக்கு முழுமையான நீசபங்கத்தைக் தரக்கூடிய உச்ச சுக்கிரனுடன் இணைந்து ராசியைப் பார்க்கும் அமைப்பில் இருக்கிறார் இது முயற்சிகளுக்கு பின்பு கன்னிக்கு வெற்றிகளைத் தருகின்ற அமைப்பு. மாதம் முழுவதும் புதன் நல்ல இடங்களில் இருப்பதாலும், முயற்சி ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் குரு அமர்ந்து ராசிநாதனைப் பார்ப்பதாலும், தொல்லைகள் எதுவுமின்றி நன்மைகளை மட்டுமே கன்னியினர் அனுபவிப்பீர்கள். குறிப்பாக இளையபருவத்தினருக்கு வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகள் இப்போது இருக்கும். அது யாரேனும் ஒருவரை சந்திப்பதாக இருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு சம்பவம் நடக்க கூடிய அமைப்பாக இருக்கலாம்.
மே மாதத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல மாற்றங்களை கன்னி ராசிக்காரர்கள் எதிர்கொள்வீர்கள் ராசிநாதனே தொழில் ஸ்தானதிபதியுமாகி குரு பார்வையோடு சுபத்துவமாக இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். வேலை, தொழில் விஷயங்களில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேலையில் நிம்மதி தருகின்ற அமைப்பும், தொழில் விஷயத்தில் நல்லவைகளும் நடக்கும். முன்னேற்றத்திற்கான அறிமுகங்கள் உள்ள மாதம் இது. பத்தாமிடத்தில் செவ்வாய் ராகு இணைவதால் சிலருக்கு பிடிக்காத விஷயங்களில் இருந்து பணவரவு இருக்கும். பணத்தின் காரணமாக பிரிந்த ஒரு உறவோ அல்லது நட்போ மனம் மாறி மீண்டும் உங்களிடம் இணையும்.
சொந்த வாழ்க்கையிலும், தொழில் அமைப்புகளிலும் குழப்பங்களை மட்டும் பார்த்தவர்களுக்கு தடைகள் விலக ஆரம்பிக்கும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். சனி, செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதால் இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். அவர்களுக்கானதை செய்வதில் தடை இருக்கும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. சிலருக்கு புரிந்து கொள்ளாத பிள்ளைகளால் தகப்பன், மகன் விரோதம் வரும்.
1,2,3,4,6,15,19,20,21,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 3 ம் தேதி மதியம் 2.40 மணி முதல் 5 ம் தேதி இரவு 10.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment