விருச்சிகம்:
போன மச்சான் திரும்பி வந்த கதையாக அதிசார நிலையில் இரண்டாமிடத்திற்கு மாறிய குரு, மீண்டும் ராசிக்கே திரும்பி வந்து ராசி சுபத்துவப்படுவதாலும், மாத ஆரம்பத்தில் ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதாலும், விருச்சிகத்தின் மன உறுதி மேம்படும் மாதம் இது. மேமாதம் முழுவதும் அவயோக கிரகங்கள் கெடுதல்களைச் செய்ய இயலாத நிலையில் இருப்பது சிறப்பான ஒரு அமைப்பு. வேலை, தொழில் அமைப்புகளில் நல்லபலன்களைத் தரக்கூடிய சூரியன் மாத பிற்பகுதியில் ஏழாமிடத்திற்கு மாறி குருவின் பார்வையில் அமரப் போவதால் இதுவரை தொழில் அமைப்பில் சிக்கல்களை சந்தித்து கொண்டிருந்த விருச்சிகத்தினர் தொழில் சங்கடங்கள் தீருவதை இப்போது உணர முடியும்.
வரும் 2020 ஏப்ரல் முதல் விருச்சிகத்திற்கு ஏழரைச்சனி அமைப்பு முழுவதுமாக முடியப் போவதால், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே நீங்கள் நன்றாக இருக்கக்கூடிய வழிமுறைகள் உருவாக ஆரம்பிக்கும். அதன்படி இந்த மாதத்தில் இருந்தே கடந்த ஏழுவருடங்களுக்கு மேலாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்காலத்தில் நீங்கள் நன்றாக, வாழ்க்கையில் எவ்வித கஷ்டங்களும் இல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலைக்கான அடிப்படை அஸ்திவாரங்கள் இந்த வருடம் முழுக்க நடக்கும். இனிமேல் விருச்சிகத்திற்கு கஷ்டம் என்பது இல்லவே இல்லை. ஆகவே தன்னம்பிக்கையை இழந்திருக்கும் ஒரு சில விருச்சிகத்தினர் கூட அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு உற்சாகத்துடன் வாழ்க்கையை எதிர் கொண்டால் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.
கடந்த காலங்களில் மனஸ்தாபத்தினால் சண்டையிட்டுக் கொண்டு, யார் முதலில் பேசுவது என்ற ஈகோவினால் பிரிந்திருந்தவர்கள் இந்த மாதம் ஒன்றிணைவீர்கள். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்ப சிக்கல்களுக்கு ஆளாகி பிரிந்திருந்த கணவன்-மனைவியினர் உண்மை நிலையினை அறிந்து சேருகின்ற மாதம் இது. உங்களின் பொருளாதாரப் பிரச்னைகள் தீரும். சிலருக்கு கடைசி நேரம் வரை பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஆனாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது. வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.
2,5,6,10,15,19,20,26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 8ம் தேதி அதிகாலை 4.15 மணி முதல் 10ம் தேதி காலை 8.36 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment