Thursday, April 25, 2019

தனுசு-2019 மே மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

தனுசு: 

தனுசு ராசி இளைஞர்களுக்கு ஜென்மச் சனி நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மூலம், பூராடம் நட்சத்திர இளைஞர்கள் மிகவும் மன அழுத்தத்திலும், எதிர்காலம் பற்றிய மன உளைச்சல்களிலும் இருக்கிறீர்கள். 40 வயதுகளில் இருக்கும் எந்த ஒரு தனுசு ராசிக்காரரும் தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றார் போல நன்றாக இல்லை என்பதே உண்மை. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டுமே பெரிய கஷ்டங்கள் எதுவுமின்றி தடைகளை மட்டும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். 50 வயதிற்கு மேற்பட்ட தனுசுவினருக்கு பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லை. 

இளைஞர்களுக்கு இந்த வருடம் முழுவதும் பணம் என்றால் என்னவென்று புரிய வைக்கக் கூடிய நிகழ்வுகள் மட்டுமே இப்போது நடக்கும். வேலை, தொழில் விஷயங்களில் அடுத்தவரை நம்பாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் அகலக்கால் வைத்து விட வேண்டாம். எப்படிப்பட்டவராக இருந்தாலும் நம்பவே வேண்டாம். இந்த காலகட்டத்தில் சனி, பணத்தை இழக்க வைத்து வாழ்க்கையை புரிய வைப்பார் என்பதால் காசு பணத்தில் கவனமாக இருக்க வேண்டிய மாதமிது. சிலருக்கு இனம்புரியாத மனக்கலக்கங்களும் தவறாக ஏதாவது நடந்து விடுமோ என்கிற பயஉணர்வும் இருக்கும். யோகாதிபதிகள் வலுவாக இருப்பதால் எந்தவிதமான எதிர்மறை பலன்களும் நடைபெறாது. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. 

நல்லது செய்பவர்களைப் போல நடித்துக் கொண்டிருந்தவர்களைப் பற்றிய உண்மைகள் தெரியவந்து அவர்களை விட்டு விலகுவீர்கள். ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம். எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத் தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். மாத ஆரம்பத்தில் அதிர்ஷ்டம் குறைவான மாதமாக இது தொடங்கினாலும், இறுதியில் கிடைக்கும் பணவரவால் உங்களுக்கு இது நிறைவான மாதமாகவே இருக்கும். 

6,8,9,10,20,21,22,27,28,29, ஆகிய நாட்களில் பணம் வரும். 10ம் தேதி காலை 8.36 மணி முதல் 12ம் தேதி காலை 11.54 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ எதுவும் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment