Thursday, April 25, 2019

மகரம்-2019 மே மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மகரம்: 

ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்தாலும் பெரும்பாலான மகர ராசிக்காரர்கள் அதை உணராத வண்ணமே நிகழ்ச்சிகள் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றன. மகரம் சனியின் சொந்த ராசி என்பதால் மற்ற ராசிக்காரர்களுக்கு தருகின்ற துன்பங்களை சனி ஒருபோதும் மகரத்திற்கு தருவதில்லை. ஏழரைச் சனியில் மற்ற ராசியினர் 100 சதவீத துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்றால் மகரத்தினருக்கு 40 சதவீத சங்கடங்களை மட்டுமே சனி தருவார். அதேநேரத்தில் வரும் ஏப்ரல் மாத சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு ஜென்மச்சனி நடக்கும் என்பதால், அப்போது பணக் கஷ்டம் வருவதற்கான சில அடிப்படைகள் இந்த மாதம் ஆரம்பிக்கும். எனவே பணவிஷயத்தில் மகரத்தினர் கவனமாக இருக்க வேண்டிய மாதமிது. 

வேலை, தொழில் விஷயங்களில் தவறான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். அவசரப்பட்டு வேலையை விடுவதோ, அனுபவம் இல்லாத தொழிலை ஆரம்பிப்பதோ இப்போது கூடாது. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க வைக்கக் கூடிய சில ஆசைகள் தற்போது தூண்டப்படும் என்பதால் மகரத்தினர் மற்றவர்களை நம்பாமல் தங்களுடைய சொந்த அறிவை மட்டுமே நம்ப வேண்டிய மாதமிது. எட்டுக்குடைய சூரியன் நான்கில் உச்சமாகி ராசியை ராகுவுடன் இணைந்த செவ்வாயும் பார்ப்பதால் எரிச்சலும், ஏமாற்றங்களும் கலந்த மாதம்தான் இது. பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். 

கடன் விஷயத்தில் கவனம் தேவை. அனைத்து மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அவரவர் வயதுக்கேற்ற திருப்புமுனைகள் இப்போது நடக்கும். நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் எதையும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. சிலர் ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். தெய்வ தரிசனம் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். 

2,5,9,11,13,15,17,18,22,28, ஆகிய நாட்களில் பணம் வரும். 12ம் தேதி காலை 11.54 மணி முதல் 14ம் தேதி மதியம் 2.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

1 comment :