கும்பம்:
பெரும்பாலான கிரகங்கள் கும்பத்திற்கு நல்ல பலனை தரக்கூடிய அமைப்பில்தான் இருக்கின்றன. ராசிநாதன் சனி எப்போதோ ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பதினொன்றாமிடத்தில் இருக்கிறார். ஆனாலும் கும்பத்தினருக்கு பெரிய நன்மைகள் எதுவும் நடக்கவில்லை. கும்பம் என்றாலே ஜோதிடத்தில் நிதானம் என்றுதான் பொருள். கும்பத்தினருக்கு மட்டும் எதுவும் மெதுவாக, நிதானமாக, மந்தமாகத்தான் நடக்கும். உங்கள் ராசிநாதனாகிய சனிக்கு மந்தன் என்றுதான் பெயர். ஆகவே தற்போது பதினொன்றாம் இடத்தில் இருக்கும் சனி, இந்த இடத்தில் இருந்து விலக இருக்கும் கடைசி ஆறு மாதங்கள்தான் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். ஆகவே எதிலும் பொறுமையாக இருக்கக் கூடிய கும்பத்தினர் சனியின் நல்ல பலன்கள் கிடைப்பதற்கும் இன்னும் சில மாதங்கள் பொறுத்துத்தான் இருப்பீர்கள்.
மாத பிற்பகுதியில் ஏழாம் அதிபதியான சூரியனும், புதனும் குருவின் பார்வையில் அமர்வதால் 15ஆம் தேதிக்கு பிறகு பொருளாதார விஷயங்கள் சீர்படும். தற்போதய நிலைமையில் மாற்றங்களை மாத பிற்பகுதி முதல் உணர்வீர்கள். கோட்சார நிலையில் சூரிய, சந்திரர்கள் வலுப் பெறும்போது கும்பத்தினருக்கு நற்பலன்கள் குறைவாகவே இருக்கும். இந்த மாதத்தில் சூரியன் உச்சமாக இருக்கிறார். செவ்வாயும் வலுவாக இருக்கிறார். எனவே உங்களுக்கு சுமாரான மாதம்தான் இது. ஆயினும் சுக்கிரன் நல்ல அமைப்பில் இருப்பதால் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும். ராசி சுபத்துவமாக இருப்பதால் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு வரப் போவது இல்லை.
தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு திருப்புமுனைகள் இருக்கும். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். கடந்த காலங்களில் இருந்து வந்த பின்னடைவான அமைப்புகளும், மன அழுத்தங்களைத் தந்த விஷயங்களும் நீங்குகின்ற மாதம் இது. குறைகள் அனைத்தும் தெய்வ அருளால் தீரும்.
2,5,11,13,15,21,22,24,25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 14ம் தேதி மதியம் 2.28 மணி முதல் 16ம் தேதி மாலை 4.57 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment