Thursday, April 25, 2019

மீனம்-2019 மே மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மீனம்: 

அதிசார நிலையில் பத்தாமிடத்தில் இருந்த ராசிநாதன் குரு, மீண்டும் ஒன்பதாம் இடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கும் மாதம் இது. மேமாதம் கெடுதலான பலன்கள் நடக்கும் என்று மீனத்திற்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. குறிப்பிட்ட ஒரு பலனாக சுப கிரகமான சுக்கிரன் 2-ல் அமர்ந்து எட்டைப் பார்ப்பதால் உங்களில் சிலருக்கு இந்த மாதம் எதிர்பாராத அதிர்ஷ்டம் ஒன்று நடக்கும். பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவற்றில் எதிர்பாராத வகையில் 10ஆம் தேதிக்கு பிறகு பெரிய லாபம் ஒன்று உங்களில் சிலருக்கு கிடைக்க இருக்கிறது. 

மாத பிற்பகுதியில் நான்காமிடத்தில் சனி, செவ்வாய், ராகு-கேதுக்கள் தொடர்பு கொள்வதால் வீடு, வாகனம், தாயார் போன்ற அமைப்புகள் பாதிக்கப்படும். உங்களில் சிலருக்கு வீடு விஷயத்தில் ஏமாற்றங்களும், வாகனச் செலவுகளும், வயதான தாயார் மூலமாக மனவருத்தம் மற்றும் மருத்துவச் செலவுகள் உண்டு. மேற்கண்டவைகளில் மாத பிற்பகுதியில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வீடு கட்டிக் கொண்டிருப்பவர்கள் நல்ல காண்ட்ராக்டரிடம் ஒப்படையுங்கள். விரயங்கள் வரும் அமைப்பு இருக்கிறது. கணவன் மனைவியைக் குறிக்கும் ஏழாமிடம் பலவீனம் பெற்ற நிலையில் இருந்தாலும், குடும்பாதிபதி நன்றாக இருப்பதால் வாழ்க்கைத் துணைவர், நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் வரும் கருத்து வேறுபாடுகளும், மனஸ்தாபமும் மாத இறுதியில் சூரியனைக் கண்ட பனிபோல ஓடி விடும். 

உங்கள் திறமைகள் வெளிவரும் மாதம் இது. அதிர்ஷ்டம் கை கொடுக்கும். வழக்கு போன்ற முக்கியமான பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். செவ்வாயும், குருவும் நல்ல அமைப்பில் இருப்பதால் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை தரும் நிகழ்வுகள் உண்டு. ஆன்மீக மைந்தர்களாகிய உங்களுக்கு இனிமேல் கெடுபலன்கள் வராமல் நன்மைகள் மட்டுமே வரும். உங்களில் சிலர் சிவா வழிபாட்டில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு இது நல்ல மாதம். வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும். நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. 

2,3,5,6,11,19,20,21,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 16 ம் தேதி மாலை 4.57 மணி முதல் 18ம் தேதி இரவு 8.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment