கடகம்:
மாதம் முழுவதும் இருக்கும் கிரக நிலைகள் கடகத்திற்கு யோகமாக மட்டுமே இருக்கும் என்பதை காட்டுகின்றன. குறிப்பாக மாத பிற்பகுதியில் இரண்டாம் அதிபதியான சூரியன் லாபஸ்தானத்தில் இருப்பது பொருளாதார நன்மைகளை தரக்கூடிய ஓர் அமைப்பு. ஐந்தில் குரு, ஆறில் சனி கேது, 12ல் ராகு போன்ற கிரக நிலைகள் எப்போதோ ஒருமுறைதான் அமையும் என்பதால் தயக்கங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு முயற்சிகளை மட்டும் மேற்கொண்டால் கடத்தினர் தங்களது வாழ்க்கை இலட்சியத்தை அடையும் காலமாக இது இருக்கும். பிறந்த ஜாதகத்தில் யோக வலுவுள்ள தசாபுக்திகளை கொண்டவர்கள் இப்போது மிகவும் நல்ல பலன்களை அடைவீர்கள். எண்ணியது எண்ணம் போல் நடக்கும் மாதமிது.
மே மாதம் கடகத்தினர் எதிலும் சாதிக்கும் மாதமாக இருக்கும். கடந்த காலங்களில் சாதகமற்ற பலன்களை சந்தித்து வந்த கடகத்தினர் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்களில் சிலருக்கு எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் உதவியால் நல்ல திருப்பங்களும் வரவுகளும் இருக்கும். சிலருக்கு இனி நடக்கப் போகும் நன்மைகளுக்கான ஆரம்பங்களும், அறிமுகங்களும் இப்போது இருக்கும். இளைய பருவத்தினருக்கு மே மாதம் மேன்மையை தரும். கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள், சொந்த வாழ்க்கையில் மனஅழுத்தம் தரும் நிகழ்வுகளை எதிர் கொண்டவர்கள், கடன்தொல்லை, வழக்கு போன்றவைகளால் நிம்மதி இழந்தவர்களுக்கு இனிமேல் நிம்மதி உண்டு.
குறிப்பாக நடுத்தர வயதில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்மறை எண்ணங்களும், மனச் சங்கடங்களும் விலகும். முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்லவழி தெரியக் கூடிய அளவிற்கு தீர்வுகள் தேடி வரும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் உண்டு. பூர்வீக சொத்து சம்மந்தமாக பிரச்சனைகள் உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்.
2,5,9,11,13,15,17,18,22,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 25ம் தேதி இரவு 11.43 மணி முதல் 28ம் தேதி பகல் 12.19 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment