Thursday, April 25, 2019

மிதுனம்-2019 மே மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மிதுனம்: 

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் நீசமாக இருந்தாலும் சுக்கிரனுடன் இணைந்திருப்பதன் மூலம் முழுமையான நீசபங்கத்தினை அடைந்திருக்கிறார். மாதம் முழுவதும் நன்மை தரும் இடமான 10, 11, 12ஆம் இடங்களில் புதன் இருப்பது மிதுனத்திற்கு நல்ல பலன்களை செய்யக்கூடிய ஒரு அமைப்பு. மே மாத முற்பகுதியில் மிதுனத்திற்கு தொழில், வேலை, குடும்பம் ஆகியவற்றில் நல்ல விஷயங்கள் நடந்து சந்தோஷம் மட்டுமே இருக்கும். பிற்பகுதியில் செவ்வாய், சனி, ராகு-கேது ஆகிய நான்கு பாபக்கிரகங்களும் ராசியோடு தொடர்பு கொள்வதால், குறிப்பாக ராசியில் செவ்வாய் அமர்ந்து சனியின் பார்வை பெறுவதால் பிற்பகுதி மாதத்தில் நீங்கள் எரிச்சல் அடையக்கூடிய சம்பவங்கள் நடக்கும். பதினைந்தாம் தேதிக்கு பிறகு மிதுனத்தினர் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய மாதம் இது. 

உங்களில் திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற மனக்குறையுடன் இருப்பவர்கள், விருப்பமில்லாமல் ஒரு தொழிலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மாற்றங்கள் கிடைக்கின்ற மாதம் இது. சிலர் வேலை விஷயமாக பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு வெகு தூரம் போக வேண்டி இருக்கும். சிலருக்கு வடக்கு திசை நோக்கிய பயணங்களும் அது சம்பந்தமான லாபங்களும் இருக்கும். குறிப்பிட்ட ஒருபலனாக செவ்வாய் ராசியில் பாபவலுப் பெறுவதால் உங்களுக்கு ஆகாதவர் என்று தெரிந்தும் அவருடன் சிரித்துப் பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வரும். எதிரியை சகித்து கொண்டு இணக்கமாக போக வேண்டிய மாதம் இது. 

ரிஸ்க் எடுக்கும் விஷயங்களை இந்த மாதம் மிதுனத்தினர் செய்யக் கூடாது. அடுத்தவரை நம்பிச் செய்யக் கூடிய விஷயங்களையும் செய்ய வேண்டாம். காலை வாரும் சம்பவங்கள் இருக்கும். சிறு விஷயங்களில் கூட கவனம் அதிகமாக தேவைப்படும். உங்களால் முடியும் என்று நம்புகின்ற விஷயங்களை மட்டும் செயல்படுத்துவது நல்லது. அதேநேரத்தில் பணவரவும், தன லாபங்களும் நிறைவாகவே இருக்கும். நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். 

2,5,7,9,10,15,17,18,19,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 23ம் தேதி காலை 11.44 மணி முதல் 25 ம் தேதி இரவு 11.43 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment