Thursday, April 25, 2019

ரிஷபம்-2019 மே மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ரிஷபம்: 

அதிசார குருப்பெயர்ச்சி மூலம் எட்டாமிடத்திற்கு மாறியிருந்த குரு, திரும்பவும் ஏழாம் வீட்டிற்கு வந்து ராசியைப் பார்ப்பதால், பெரிய சங்கடங்கள் எதுவும் வந்து விடாத மாதமிது. மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெறுவதும், பிற்பகுதி முழுவதும் அவருக்கு நன்மை தரும் இடமாக சொல்லப்படும் 12-ஆம் இடத்தில் இருப்பதும் ரிஷபத்திற்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் அஷ்டமச் சனியின் இன்னல்களை குறைக்கின்ற விதத்தில் இருக்கும். 

ரிஷபராசி இளைஞர்கள் தற்போது வேலை, தொழில்களில் முன்னேற்றம் இல்லாத நிலைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அஷ்டமச் சனி நடக்கும் பொழுது நீங்கள் எதில் பெரிதும் நம்பிக்கை வைத்து இருக்கிறீர்களோ அதில் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு பின்னடைவுகள் இருக்கும். வாழ்க்கை என்பது எப்படிப்பட்டது என்பதை கற்றுக் கொடுக்கும் விதத்தில் தற்போதைய கிரக நிலைகள் உள்ளதால் ஆதாயம் ஏதும் இன்றி அனுபவங்கள் மட்டுமே கிடைக்கின்ற மாதமாக மே மாதம் இருக்கும். புதன் பலவீனமாவதால் பிள்ளைகள் விஷயத்தில் மனக்குறை வரும். பருவ வயது குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் குறைகளை காது கொடுத்துக் கேளுங்கள். குழந்தைகளிடம் நட்புடன், கனிவாக இருங்கள். என்ன இருந்தாலும் அவர்கள் உங்களின் குழந்தைகள், உங்களின் உழைப்பும் சேமிப்பும் அவர்கள் நன்றாக இருப்பதற்காகத்தான் என்பதை மனதில் இருத்தி அவர்களின் பிரச்னைகளை அணுகுங்கள். 

ஒன்றுவிட்ட சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும். குடும்பத்தில் பாகப்பிரிவினை அல்லது பூர்வீக சொத்து பிரச்சனை சம்பந்தமாக பேச்சுவார்த்தை இருந்தால் தள்ளி வையுங்கள். உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறு ஆரோக்கியக் குறைவு என்றாலும் கூட மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களில் சிலர் அதிகமாக யோசித்துச் செயல்படும் குணமுடையவர்கள் என்பதால் மனக் குழப்பத்தில் இருப்பீர்கள். இந்த மாதம் நடக்க இருக்கும் சில மாற்றங்கள் உங்களுக்கு நன்மைகளைத் தர இருப்பதால் எதிலும் எதிர்மறையாக யோசிக்காமல் நல்லவிதமாக செயல்பட்டு உயர்வுகளை பெறுங்கள். 

2,5,11,13,15,17,18,24,25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 21ம் தேதி அதிகாலை 2.29 மணி முதல் 23ம் தேதி காலை 11.44 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

1 comment :