மேஷம்:
மாதம் முழுவதும் சுபக்கிரகங்கள் ராசியோடு தொடர்பு கொள்வதும், தன ஸ்தானமான இரண்டாமிடத்தில் ராசிநாதன் செவ்வாய், குருவின் பார்வையில் இருப்பதும் மே மாதம் மேஷத்திற்கு குறையில்லாத மாதமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. கடந்த காலங்களில் தொழில்நஷ்டம், கடன் தொல்லைகள் போன்றவற்றால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தவர்களின் வேதனைகள் தீரும் மாதமிது. மாத பிற்பகுதியில் ராசிநாதன் செவ்வாய் ராகுவுடன் இணைந்து கிரகண நிலை பெறுவதால், 15-ஆம் தேதிக்கு பிறகு உங்களில் சிலர் வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றார்போல தொழில், குடும்பம் போன்றவற்றில் சிக்கல்களை சந்திப்பீர்கள். பொதுவாக மேஷத்திற்கு நன்மைகளைத் தரும் மாதம் இது
ராசிநாதன் வலுவுடன் உள்ளதால் சந்தோஷமான மனநிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு வேலை செய்யும் இடங்களிலும் தொழில் அமைப்புகளிலும் மறைமுகமான எதிரிகள் உருவாகி கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்களது முயற்சி பலிக்காது. மேஷத்திற்கு இனிமேல் எதிலும் தோல்வி இல்லை. அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் மேலோங்கிய நிலையில் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் சிறப்பாக நடைபெறும். குடும்ப ஸ்தானம் வலுப்பெறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வீட்டுப்பொருள் ஏதாவது வாங்குவீர்கள். துணைவர் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
சிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் விஷயத்தில் கவனம் சிதறும். இளைய பருவத்தினருக்கு புதிய நட்புகள் கிடைக்கும். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள். பெண்களிடம் கவனமாக இருங்கள். அலுவலகத்தில் மேலதிகாரியாக பெண்கள் இருந்தால் அவர்கள் பேச்சைக் கேட்பது நல்லது.
1,2,3,5,6,15,19,20,26,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 18ம் தேதி இரவு 8.30 முதல் 21ம் தேதி அதிகாலை 2.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment