ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய ,யி, யு, நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
விருச்சிகத்திற்கு இனி என்றும் வேதனைகள் என்பது இல்லை. நீங்கள் கஷ்டப்பட்ட காலங்கள் போய்விட்டது. அடுத்தடுத்து நடக்க இருக்கும் கோட்சார கிரக மாறுதல்கள அனைத்தும் இனி உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும். இனி விருச்சிக ராசியினர் அனைவரும் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.
இப்போதைய ராகு, கேது பெயர்ச்சியை பார்க்கப் போனால் இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த ராகு எட்டாமிடத்திற்கும், மூன்றாமிடத்தில் இருந்து வந்த கேது இரண்டாமிடத்திற்கும் மாற இருக்கிறார்கள்.
மேற்கண்ட இரண்டு, எட்டு எனும் இடங்களில் ராகு-கேதுக்கள் இருப்பது நன்மைகளைத் தரும் அமைப்பாக நமது மூலநூல்களில் சொல்லப்படவில்லை. அதேநேரத்தில் ஒரு கிரகம் கெட்ட இடத்தில் அமர்வதால் மட்டுமே கெடுபலன்களைத் தந்துவிட முடியாது. அந்த இடத்தில் யாருடன் அந்தக் கிரகம் தொடர்பு கொள்கிறார் என்பதை வைத்தே அது செய்யும் நல்ல, கெட்ட பலன்களை முடிவு செய்ய முடியும்.
அதன்படி இந்தப் பெயர்ச்சியின் ஆரம்பத்தில் எட்டாமிடத்திற்கு ராகு மாறினாலும் வரும் நவம்பர் மாதம் முதல் குருவின் பார்வையை பெறப்போவதால் உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தின் கெடுபலன்களை ராகு செய்யமாட்டார்.
அதேபோல இரண்டாமிடத்திற்கு மாறும் கேது, குருவின் வீட்டில் இருக்கப் போவதாலும், நவம்பர் முதல் குருவோடு இணையப் போவதாலும் கெடுதலாக சொல்லப்படும் இரண்டாமிடத்து கேதுவும் உங்களுக்கு கெடுபலன்களை செய்யாது என்பது உறுதி.
அதே நேரத்தில் எட்டாமிடம் என்பது மாற்றங்களைக் குறிக்கும் இடம் என்பதாலும் ராகு எதையும் தலைகீழாக மாற்றும் கிரகம் என்பதாலும் உதாரணமாக கிழவனைக் குமரனாகவும், பிச்சைக்காரனை குபேரனாகவும் ராகு மாற்றுபவர் என்பதால் இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரையும் ஒருவர் பாக்கியில்லாமல் சந்தோஷமாக இருக்க வைப்பதே ராகுவின் எட்டாமிடத்து பலனாக இருக்கும்.
இன்னொரு குறிப்பிட்ட பலனாக இதுவரை ஒரே இடத்தில் நிலையாக இருப்பவர்களை இந்த ராகு-கேது பெயர்ச்சி மாற்றியமைக்கும் என்பதோடு இருக்கும் இடத்தை விட்டு தூரத்திற்கும் அனுப்பும் என்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் எல்லா நிலைகளுக்கும் தயாராக இருப்பது நல்லது.
எட்டாமிடம் வெளிநாட்டுத் தொடர்புகளைக் குறிக்கும் என்பதால் வெளிநாட்டுக்குப் போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
ஏற்கனவே மணவாழ்வில் குறைகள் இருந்தவர்கள் வாழ்க்கைத் துணையால் நிம்மதிக் குறைவை சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கப் பெறுவீர்கள். கருத்துவேறுபாடுகளாலோ, வேலை விஷயமாகவோ பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வீர்கள்.
கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழ்நிலை உருவாகி தொழில் மேன்மை பெறும். தவறான மூன்றாம் நபர்களால் பிரிக்கப்பட்ட நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்வீர்கள். சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிர்கால தம்பதியினர் தவறுகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் குணங்களை மாற்றிக் கொள்வீர்கள். இதுவரை தாமதமான இளைய பருவத்தினருக்கு உடனடியாக திருமணம் கூடி வரும்.
இதுவரை உங்களை விட்டு விலகியிருந்த சுறுசுறுப்பு மீண்டும் உங்களிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்\. தவறான முடிவுகளை எடுத்து வருந்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது உங்களை சீர்ப்படுத்திக் கொள்வீர்கள். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தற்போது நிவாரணம் கிடைக்கும்.
உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும். பேச்சு சிறக்கும், செயல்திறன் கூடும், உங்களுடைய நல்ல வார்த்தைகளைக் கொண்ட பேச்சுக்களால் அடுத்தவர்களால் விரும்பப்படுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை இனிமேல் நீங்கும்.
கேதுவின் முக்கிய பலனாக குறிப்பிட்ட சில விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். 2020ம் ஆண்டு ஆரம்பத்திலேயே சிலருக்கு கோவில் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். சிலர் சிதிலமடைந்து கவனிப்பாரற்று கிடைக்கும் பழைய கோவில்களை புனருத்தானம் செய்வித்து அதன் மூலம் ஏழு தலைமுறைக்குத் தேவையான புண்ணியத்தை சேர்த்துக் கொள்வீர்கள்.
உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.
இந்தக் ராகு கேதுப் பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள்.
இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.
உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தொல்லை கொடுத்த மேல் அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் அங்கே வருவார்கள். இதுவரை தடைப்பட்ட பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும்.
தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்ல நேரம். எந்தக் காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். ஊரில் இருக்க முடியாமல் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி பழைய வாழ்க்கையைத் தொடரும்படி சம்பவங்கள் நடைபெறும். காதலால் மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள் மற்றும் காதலைப் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள் அல்லது புதிய துணை கிடைக்கும்.
சிலருக்கு வாழும் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உண்மையான அவதார புருஷர்களை அடையாளம் காண்பீர்கள். உங்களில் சிலர் ஆன்மிகத்தின் உச்ச நிலைக்கு சென்று அடுத்தவரால் ஆராதிக்கப்படுவீர்கள்.
நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.
கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தரும்.
இதுவரை உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படியாக நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வேறு இன மொழி மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள்.
நவம்பருக்குப் பிறகு குருபகவானால் நல்ல மாறுதல்கள் இருக்கும். வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும். மொத்தத்தில் விருச்சிகத்திற்கு திருப்புமுனையாக இந்தப் பெயர்ச்சி அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பரிகாரங்கள்
ராகு கேதுக்களால் ஏற்படும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள ஒரு முறை ஸ்ரீகாளஹஸ்தி திருநாகேஸ்வரம் குன்றத்தூர் நாகநாதசுவாமி திருக்கோவில் காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயம் போன்ற திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.

ithuvarai evvalavo anupavithu vittom ayya. enathu maganuku nallathu nadakkavendum. ungalathu vakku palikkattum
ReplyDelete