விருச்சிகம்:
விருச்சிக ராசியை 2015 முதல் வாட்டி வதைத்த ஜென்மச்சனி முடிந்து விட்டதால்
இனிமேல் வாழ்க்கையில் நல்ல விதமாக செட்டில் ஆவீர்கள். சனியின் கொடுமைகள்
இனிமேல் மட்டுப்படும். படிப்படியாக கஷ்டங்கள் விலகி புது மனிதன் ஆகப்
போகிறீர்கள். கஷ்டங்கள் அனைத்தும் விலகப் போகிறது. கடந்த சில மாதங்களாக
விருச்சிகத்தினர் இரண்டு ஏழரைச்சனிக்குடைய கெடுபலன்களை சந்தித்து விட்டீர்கள்.
குறிப்பாக இளம் வயதினர் தன்னம்பிக்கை இழக்கும் அளவிற்கு சோதனைகள் இருந்து
வந்தன. தற்போது ராசியில் இருந்து சனி விலகி விட்டதால் துன்பங்கள் அனுபவித்த
அனைவரும் அதிலிருந்து மீண்டு வருவீர்கள்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் எவ்வித கெடுபலன்களும் நடக்காத
மாதமாக இருக்கும். ஒரு சிறப்புப் பலனாக ராசிநாதன் செவ்வாய் பதினொன்றில்
இருப்பது அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் வலிமையை ராசிக்குத் தரும்
என்பதால் கடந்த நான்கு வருடங்களாக வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்சனைகளை
மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் முதல் தீர்வுக்கான
பாதைகள் தெரிய ஆரம்பிக்கும். வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும்
சிலருக்கு இந்த மாதம் நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு சிறப்புக்கள்
தேடி வரும். நான்குபேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள்.
கெடுபலன்கள் இனிமேல் இருக்காது. எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சில
விஷயங்களை இப்போது செய்வீர்கள். சிலருக்கு வீடு அல்லது வாகனம் புதியதாகவோ
ஏற்கனவே உள்ளதை மாற்றியோ அமையும். பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற யூகவணிகத்
தொழிலில் உள்ளவர்களுக்கு நற்பலன்கள் உண்டு. போட்டி, பந்தயங்கள் வெற்றியைத்
தரும். நீண்டநாள் சந்திக்காத ஒரு உறவினரையோ, நண்பரையோ சந்தித்து மகிழ்ச்சி
அடைவீர்கள். செவ்வாய் நல்லநிலையில் இருக்கும் அடுத்த சில வாரங்களில் உங்களின்
நீண்டநாள் எண்ணங்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம் தேதி காலை 6.41 முதல்
9-ம் தேதி காலை 8.02 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த
ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது
போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.

No comments :
Post a Comment