துலாம்:
ஏழரைச் சனி விலகி விட்டதால் துலாம் ராசிக்காரர்களின் மனோதைரியம் அதிகரிக்கும்
மாதம் இது. எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது பிறக்கும்.
உங்களில் சிலர் பணியிடங்களில் புகழ் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
சிலருக்கு நீண்டநாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து
வந்த மனக்கசப்புகள் விலகும். ராசிநாதன் சுக்கிரன் ராசியில் இருப்பதால்
அதிர்ஷ்டம் கை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடப்பதோடு குடும்பத்திலும் சந்தோஷமான
நிகழ்வுகள் இருக்கும்.
ராசிநாதன் ஆட்சி வலுப் பெறுவதால் இந்த மாதம் முழுவதும் நல்லபலன்கள்
மட்டும்தான் இருக்கும். ஒரு சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ முக்கியமான
விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும். முயற்சி ஸ்தானம் வலுப் பெறுவதால்
இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை உங்களை விட்டு விலகும். அனைத்து
விஷயங்களிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள். ஒரு சிலர்
எடுத்துக் கொண்ட காரியங்களை நல்ல விதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள்.
செவ்வாய், ராகு வலுவாக இருப்பதால் சிகப்புநிறம் சம்மந்தப்பட்டவர்கள், ரியல்
எஸ்டேட்காரர்கள் புரோமோட்டர்கள் ஜெல்லி, மணல் விற்பவர்களுக்கு இந்த மாதம்
எதிர்பாராத லாபம் வரும். திருமணமாகாத துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம்
கைகூடி வரும் நேரம் இது. பொதுவாக துலாம் ராசிக்காரர்கள் களையாக அழகாக
இருப்பார்கள். அழகுணர்ச்சி மிக்கவர்கள் நீங்கள். நீண்ட நாட்களாக திருமணம்
தாமதமாகி வருபவர்கள் வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் வாழ்க்கைத் துணையோடு
இணைவீர்கள். ஒரு சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு
கிடைக்கும்.
2,3,8,9,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி காலை 6.27 முதல்
7-ம்தேதி 6.41 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய
முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம்
அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள்
எதையும் எடுக்க வேண்டாம்.

No comments :
Post a Comment