கன்னி:
தனாதிபதி சுக்கிரன் தன ஸ்தானத்தில் ஆட்சியாக இருப்பதும், இன்னொரு சுபரான குரு
பகவானும் அவருடன் இரண்டில் இருக்கும் நிலையில் நவம்பர் மாதம் பிறக்கிறது.
கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற பொருளாதார பிரச்சினைகளை
தீர்க்கின்ற மாதமாக இந்த மாதம் இருக்கும். குறிப்பாக கடந்த சில வருடங்களாக
கடன் தொல்லைகளில் அவதிப்பட்டவர்களுக்கு இந்த மாதம் விடிவுகாலம் பிறக்கும்.
உங்களின் எதிர்ப்புகளும் எதிரிகளும் பலம் இழக்கும் மாதம் இது. அலுவலகங்களில்
நிம்மதியை இழந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் இப்போது
தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும்.
கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். ஒரு சிலர் வெளிநாட்டுக்கு செல்வீர்கள்.
பணவரவில் குறையேதும் இல்லை. வெகு நாட்களாக எதிர் பார்த்த ஒரு தொகை கிடைக்கும்.
பெண்கள் விஷயத்தில் சற்றுத் தள்ளியே இருங்கள். சிலருக்கு தாமதித்து வந்த வேலை
இப்போது கிடைக்கும். அரசுவேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும்.
இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். பெண்கள் மூலமான செலவுகள்
இருக்கும். மனைவிக்கு கழுத்து நகை வாங்கித் தருவீர்கள். வேலை, வியாபாரம் சொந்த
தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப் படுவதற்கு
ஒன்றும் இல்லை.
தனஸ்தானம் வலுவடைவதால் மறைமுகமான வருமானங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம். இளைஞர்கள்,
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம்
சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வெளிநாடு
சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள்.
3,6,8,11,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 3-ம் தேதி
அதிகாலை 5.29 முதல் 5-ம் தேதி காலை 6.27 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள்,
ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :
Post a Comment