மாதம் முழுவதும் சுக்கிரன் ஆட்சி நிலையில் இருப்பதால் ரிஷப ராசிக்கு இந்த
மாதம் நல்ல மாதமே. ஆயினும் ராசிநாதன் சுக்கிரன் ஆறாம் இடத்தில் ஆட்சி நிலை
பெறுவதால் கிடைக்கின்ற நன்மைகள் எதையும் அனுபவிக்க இயலாத தடைகள் இந்த மாதம்
ரிஷப ராசிக்கு இருக்கும். சிலருக்கு ஏதேனும் தவறாக நடந்துவிடுமோ என்கின்ற
மனக்கலக்கங்களும் இருக்கின்ற மாதம் இது. உங்களின் அனைத்து வெற்றிகளும் கடும்
முயற்சிகளுக்கு பின்பே வந்ததாக இருக்கும். மாத முற்பகுதியில் நல்ல பலன்களும்,
பிற்பகுதியில் எந்த ஒரு காரியத்திற்கும் அதிக முயற்சி தேவைப்படும்
நாட்களாகவும் அமையும்.
சுக்கிரன் சுப வலுவாக உள்ளதால் தன் திறமையை மட்டும் வைத்துத் தொழில்
செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் இந்தமாதம் நல்ல
முன்னேற்றம் அடைவீர்கள். அரசு ஊழியருக்கு இது நல்ல மாதம். காவல்துறை, ராணுவம்
போன்றவைகளில் பணிபுரிபவருக்கு நன்மைகள் இருக்கும். கணவன், மனைவி உறவு சுமாராக
இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்களுக்குள் கருத்து வேற்றுமை வரும். இன்னும்
ஒருவருடத்திற்கு கூட்டுத் தொழிலில் கசப்புக்கள் வராமல் பார்த்துக் கொள்வது
நல்லது. அஷ்டமச் சனி நடப்பதால் பங்கு பிரிப்பது, தனியே போவது போன்றவைகள்
இப்போது கூடாது.
கடன்தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும்.
ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சூரியனும்,
புதனும் நல்லஇடங்களில் இருப்பதால் தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள்
வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. நீண்டதூர
பிரயாணங்கள் இருக்கும். எதிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு இப்போது
நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் நடக்கும். சுயதொழில் செய்வோர் தொழில்
முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இந்த மாதம் உண்டு.
1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ம் தேதி அதிகாலை 12.47
முதல் 23-ம் தேதி மதியம் 1.46 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில்
முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு
நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய
வேண்டாம்.

No comments :
Post a Comment