மிதுனம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் புதனும், யோகாதிபதி சுக்கிரனும் நட்பு நிலைகளில்
வலுவான அமைப்பில் இருப்பதால் இந்த மாதம் மிதுனத்திற்கு யோகமான மாதம்தான்.
குறிப்பாக குருபகவான் ஐந்தாம் இடத்தில் அமர்ந்து ராசியை பார்த்து கொண்டு
இருப்பதால் எண்ணியது எண்ணம் போல் நடக்கின்ற மாதம் இது. சிலருக்கு பொருளாதார
மேன்மையும் இருக்கும். ஐந்தாமிடக் குருவின் பார்வையால் கடந்த இரண்டு
வருடங்களில் சாதிக்க முடியாமல் போனவைகள் எல்லாவற்றையும் இன்னும் ஆறுமாதங்களில்
நிறைவேற்றி பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்துக் கொள்வீர்கள் என்பதால்
மிதுனத்திற்கு நல்ல மாதம் இது.
நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்த மாதம் நல்லபடியாக
முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள்
கிடைக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள்
எதுவும் இருக்காது. காவல்துறையினருக்கு இது நல்லமாதம். மாணவர்கள் மனம்
சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.
பணவரவு தாராளமாக இருக்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும்.
குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நீண்டநாட்களாக
நிறைவேற்றாமல் இருந்த நேர்த்திக் கடன்களை செலுத்த முடியும். வேலைக்குச்
செல்லும் பெண்களுக்கு நிம்மதி உண்டு.
சமுதாயத்தில் அனைத்து தரப்பு மிதுன ராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் ஏதேனும்
ஒரு வகையில் நன்மைகளை தரும். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள்
இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு
சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். சிலருக்கு
புத்திரபாக்கியம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் இருக்கும்.
2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம்தேதி மதியம் 1.46 முதல்
26-ம் தேதி அதிகாலை 2.01 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய
முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும்
நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும்
வாக்குவாதம் தவிர்ப்பதும் நல்லது.

No comments :
Post a Comment