கடகம்:
மாத ஆரம்பத்திலேயே ராசிநாதன் சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது
கடகத்திற்கு ஒரு சிறப்பான அமைப்பு. சில நாட்களுக்கு முன் நடந்த சனிப்
பெயர்ச்சியின் மூலமாக சனிபகவான் யோகம் தரும் அமைப்பில் வந்திருப்பதால் அடுத்த
மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் சிறப்பான ஒரு நிலையை அடையப் போவதற்கான
ஆரம்பங்களை தரும் மாதம் இது. நவம்பர் மாதம் கடக ராசிக் காரர்களின்
குடும்பத்தில் கணவன்-மனைவி அன்யோன்னியமும், சந்தோஷமும் இருக்கும். திருமணமாகாத
இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் சந்தோஷச் செய்திகள் உண்டு.
வெளிநாட்டு விஷயங்கள் இப்போது லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
கிடைக்கும். சுக்கிரன் வலுப் பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய
வாகனம் வாங்குவீர்கள். நீண்டநாட்களாக சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின்
கனவு நனவாகும். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. கலைஞர்களுக்கு இது
நல்லகாலமாக அமையும். சிறு கலைஞர்கள் பிரபலமாவற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன.
தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது.
கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் கடகராசிக்காரர்கள் இந்தமாதம் உற்சாகத்துடனும்,
செயல்திறனுடனும் காணப்படுவீர்கள். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும்
தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல
மாதமே. காவல்துறையினருக்கு திருப்பங்கள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை
காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். குறிப்பிட்ட சிலருக்கு அதிகாரப் பதவிகள்
கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு.
தொழில், வியாபாரம் போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக
நடக்கும்.
1,2,3,7,10,11,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம்தேதி அதிகாலை 2.01 முதல்
28-ம் தேதி காலை 11.15 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில்
நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் குருவின்
பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது.

No comments :
Post a Comment