Thursday, November 2, 2017

Mesham : 2017 November Month RasiPalangal – மேஷம் : 2017 நவம்பர் மாத பலன்கள்

மேஷம்:

மாத ஆரம்பத்திலேயே ராசிநாதன் செவ்வாய் வளர்பிறை சந்திரனின் பார்வையில் இருப்பதாலும், செவ்வாயும், குருவும் ராசியை பார்ப்பதாலும் நவம்பர் மாதம் மேஷ ராசிக்கு நன்மைகளை மட்டுமே அளிக்கின்ற மாதமாக இருக்கும். குறிப்பாக கடந்த மூன்று வருடங்களாக அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் அல்லல்பட்டுக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முதல் தடைகள் விலகுவதும் முன்னேற்றங்களுக்கான தொடக்கமும் இருக்கும். ஒரு சிறப்புப் பலனாக உங்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் உங்களுக்கு உதவக்கூடிய தகுதியுடனும், மனதுடனும் இப்போது இருப்பார்கள் என்பதால் வெளியில் இருந்தும் தக்கநேரத்தில் உதவிகள் கிடைக்கும் மாதமாகவும் இது இருக்கும்.

ராசிநாதனின் வலுவால் உங்களின் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்களும் உண்டு. சனி விலகி விட்டதால் அனைத்தும் இனிமேல் சித்திக்கும் மாதம் இது. பிறந்த தேசத்தை விட்டு வெளிநாட்டில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இருக்கும். ஒரு சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் நபர்களை இப்போது சந்திப்பீர்கள். ஆறாமதிபதி பரிவர்த்தனை வலுப் பெறுவதால் நடுத்தரவயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற நீண்டகால குறைபாடு உள்ளவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

குருபகவான் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் நல்ல மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை

5,6,7,11,12,13,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி மதியம் 12.49 மணி முதல் 21-ம் தேதி அதிகாலை 12.47 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

No comments :

Post a Comment