மகரம்:
சுக்கிரன் பத்தாமிடத்தில் வலுப்பெற்ற நிலையில் இருப்பதால் மகர ராசி
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் மாதம் இது. மாணவர்கள் நன்கு
படிப்பீர்கள். வேலை, தொழில், அமைப்புகளில் இப்போது உள்ள தேக்கமும்
முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி இனிமேல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும்
இருக்கும். இதுவரை தடங்கலாகி வந்த சில விஷயங்கள் கூட உங்கள் எண்ணம் போல்
இப்போது நிறைவேறும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு.
எந்த ஒரு விஷயத்திலும் இது நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே
இருக்கும். காரணம் எதுவுமின்றி எதையாவது நினைத்து கலக்கமடைவீர்கள்.
ராசிநாதனுக்கு வீடு கொடுத்த குரு சுபத்துவமடைவதால் எதுவும் கைமீறிப் போகாமல்
நீங்கள் சமாளிக்கும் மாதமாக இது இருக்கும். இளைய பருவத்தினருக்கு
அலைச்சல்களும் எதிர்காலத்தை பற்றிய பயங்களும் இருக்கும். பெரியவர்களுக்கு
காரியத்தடையும், சுற்றி உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களும் உண்டு. பங்குச்
சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிகையுடன் இருக்கவும். விரயங்கள் வருவதற்கு
வாய்ப்பு இருக்கிறது. சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவைகளை நம்ப வேண்டாம்.
தாயார் வழியில் செலவுகள் வரலாம். தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும்.
குருபகவான் பத்தில் இருப்பதால் பணப்பிரச்னைகள் எதுவும் வராது. வெளிநாடு
சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபங்கள் இருக்கும்.
மாத பிற்பகுதியில் வம்பு, வழக்கு, தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப்
போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல், வீண்செலவு, அனாவசிய கடன் போன்ற
பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது
அவசியம். செல்போன் பத்திரம். நடுத்தரவயதை கடந்தவர்கள் தங்கள் உடல்நலனில்
அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண்அரட்டைகளில்
ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம்.
1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம் தேதி காலை 11.43 முதல்
13-ம் தேதி மாலை 5.59 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட
தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள்
எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

No comments :
Post a Comment