Thursday, November 2, 2017

Kumbam : 2017 November Month RasiPalangal – கும்பம் : 2017 நவம்பர் மாத பலன்கள்

கும்பம்:

மாதம் முழுவதும் சுக்கிரன் வலுவாக ஆட்சி நிலையில் இருப்பதால் இந்த மாதம் கும்பத்தினர் தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். ராசிநாதன் சனியும் புதனும் கூட பலமாக இருப்பதால் உங்களுக்கு நல்ல மாதம் இது. சூரியனின் நீசபங்க வலுவால் சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் இனிமேல் தீர தொடங்கும். வேலை மாற்றம் நடந்து மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.

வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும். நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும். அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள். காவல்துறையினருக்கு இந்தமாதம் நல்ல மாதமாக அமையும். கலைத்துறையினர், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இந்த மாதம் லாபம் தரும்.

வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவருக்கும் இது பொன்னான நேரம் என்பதால் புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரப்பதவி கிடைக்கும். எந்த ஒரு செயலும் தற்போது வெற்றியாக முடியும். மாத பிற்பகுதியில் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு பணவரவுகளும், சந்தோஷமான நிகழ்ச்சிகளும் உண்டு. மாதம் முழுவதும் மன மகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் இருப்பீர்கள். இனிமேல் கும்ப ராசிக்காரர்களுக்கு பெரிய துன்பங்கள் எதுவுமே வரப்போவது இல்லை. இதுவரை மனதிற்குள் சோகத்தை மட்டுமே கொண்டிருந்த கும்ப ராசிக்காரர்கள் இனிமேல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மாதமாக இது இருக்கும்.

1,2,3,8,9,11,12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி மாலை 5.59 முதல் 16-ம் தேதி அதிகாலை 2.29 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

No comments :

Post a Comment