மாத முற்பகுதியில் ராசிநாதன் சூரியன் குருவின் பார்வையில் இருந்து ராசியைப் பார்ப்பதால் சிம்மராசிக்கு மார்ச்மாதம் சிறப்புக்கள் சேர்க்கும் மாதமாக இருக்கும்.
மாதத்தின் பின்பகுதியில் எட்டுக்குடைய குருவும், ராசிநாதனும் சுபத்துவ நிலையில் பரிவர்த்தனையாவதால் தூர இடங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல் கிடைப்பதும்
குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு மற்றும் இதுவரை தாமதித்து வந்த விசா கிடைப்பதும் இந்த மாதம் இருக்கும்.
ஜென்மராசியில் ராகு இருந்து உங்களுடைய செயல்திறமையை முடக்கிப் போட்டு உங்களை சோம்பலாக்க பார்த்தாலும் சுபகிரகமான குருபகவான் அங்கே இருந்து அவர் உங்களுக்கு
நண்பராகவும் இருப்பதால் ராகுபகவான் நன்மைகளையே அதிகம் செய்வார் என்பது நிச்சயம். சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள்
இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும்.
வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் சில உல்லாச அனுபவங்கள் இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால்
சிக்கல்கள் வரலாம்.ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். அவசியத் தேவைக்காக கடன் வாங்க
வேண்டியது வரலாம். பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில்
முன்னேற்ற பாதையில் செல்லும்.
2,4,5,6,7,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ம்தேதி மாலை 4 மணி முதல் 11-ம்தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் புதிய
முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
No comments :
Post a Comment