மாதம் முழுவதும் ராசிநாதன் குருபகவான் ராசியைப் பார்க்கும் நிலையில் இருந்தாலும் அவர் வக்கிரமாகி ராகுவுடன் இணைந்திருப்பது வலுக்குறைவுதான் என்பதால் மார்ச்மாதம்
தனுசுராசிக்கு நல்லதும், கெட்டதும் கலந்த கலப்பு பலன்களைத் தரும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் சூரியனும் குருவும் நேருக்கு நேராக சமசப்தமமாக அமர்ந்து
சிவராஜயோகம் உண்டாவதால் பொது வாழ்க்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் ஒரு நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் தனுசுராசிக்காரர்களுக்கு
நல்லதிருப்பங்கள் உள்ள மாதமாகவும் இருக்கும்.
அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு மாத ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலிடத்தில் நீங்கள்
தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலம் சரி
இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு பதவி உயர்வு உண்டு.
தனுசு ராசிக்கு ஆகஸ்டு மாதம் வரை அடிப்படை அஸ்திவாரங்களை கிரகங்கள் செய்யும் அமைப்பு வலுவாக இருப்பதால் இந்த சாதகமான நேரத்தில் இளைய பருவத்தினர் தங்களது
எதிர்காலத்தை பற்றிய திட்டமிடலையும் அதை நோக்கி போவதற்கான அடிப்படைகளையும் அமைத்துக் கொள்ளுவது நல்லது. வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள்
இருக்கின்றன. வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
2,4,5,6,7,11,12,13,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம்தேதி அதிகாலை 2 மணி முதல் 20-ம்தேதி பகல் 11.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில்
நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பதும், அறிமுகமில்லா ஆட்களிடம் தேவையின்றி விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் நல்லது.
No comments :
Post a Comment