Tuesday, March 1, 2016

விருச்சிகம்: 2016 மார்ச் மாத பலன்கள்

விருச்சிகம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே இருக்கிறார். ராசி வலுப்பெற்றால் ஏழரைச்சனியின் கெடுபலன்கள் குறையும் என்ற விதிப்படி இந்த மாதம் விருச்சிகராசிக்கு சோதனைகள் எதுவும் இல்லாத நற்பலன்கள் நிறைந்த மாதமாக இருக்கும். மேலும் ஒரு சிறப்பாக இன்னும் சில மாதங்களுக்கு செவ்வாய் பகவான் ராசியிலேயே இருக்கும் நிலை பெறுவதால் ஏறத்தாழ இந்த வருடம் முழுவதுமே இனிமேல் விருச்சிகராசிக்கு கெடுதல்கள் இருக்காது என்பதும் உறுதியான விஷயமாக இருக்கும்.

தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுயோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளையபருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். பணவரவிற்குப் பஞ்சம் இல்லை. யார் வீட்டு பணமானாலும் உங்கள் பாக்கெட்டில் தாராளமாக விளையாடும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள்.

பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்பு முனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

1,2,3,6,8,11,12,13,21,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம்தேதி இரவு 8 மணி முதல் 18-ம்தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் எவருடனும் வீண் வாக்குவாதம் செய்வதோ சண்டை போடுவதோ வேண்டாம். மேற்கண்ட தினங்களில் எதிலும் பொறுத்துப் போங்கள்.

No comments :

Post a Comment