மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் நான்கு, ஐந்தாமிடங்களில் சுபத்துவமான அமைப்பிலும் நட்பு வலுவிலும் இருப்பதால் இந்த மாதம் துலாம் ராசிக்காரர்களின் எண்ணங்கள்
நிறைவேறும் மாதமாக இருக்கும். தனாதிபதி செவ்வாய் வலுப்பெற்று ஜீவனஸ்தானத்திற்கு திரிகோணத்தில் இருப்பதால் இந்தமாதம் பேச்சினால் வருமானம் பெறும் துறையினரான
வக்கீல், ஆசிரியர், மார்க்கெட்டிங் போன்ற அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல பணவரவு உள்ள மாதமாகவும் இது இருக்கும்.
மூத்த அண்ணன், அக்காக்கள் உதவுவார்கள். தந்தை வழி உறவினர்களிடம் பிரச்னைகள் வரலாம். குறிப்பிட்ட சிலருக்கு பெண்களால் லாபம் உண்டு. அலுவலகங்களில் சுமுகமான
சூழ்நிலை இருக்கும். ஒரு சிலருக்கு குலதெய்வ வழிபாடோ புனித யாத்திரையோ அமையும். இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல்
விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். லாபஸ்தானத்தில் குரு ராகு இணைந்துள்ளதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற இனங்களில் நல்லவைகள் நடக்கும்.
அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். கடன் தொல்லைகளால்
அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு
இருக்கிறது. சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத்
தொடங்கும்.
2,5,7,8,9,10,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம்தேதி மாலை 5 முதல் 15-ம்தேதி இரவு 8 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் வெகு
தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.
No comments :
Post a Comment