ராசிநாதன் நீசநிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நிலையில் மார்ச் மாதம் அமைவதால் மிதுனராசிக்கு இந்தமாதம் எதிலும் தடைகளும், தாமதங்களும் உள்ள மாதமாக
இருக்கும். ராசிநாதன் பலவீனமாகி ஆறுக்குடையவன் ஆட்சி பெறுவதால் இதுவரை அடங்கி இருந்த எதிர்ப்புகள் மற்றும் கடன் பிரச்னைகள் லேசாக தலைதூக்கும் என்பதால்
மிதுனராசிக்காரர்கள் கோபத்தை மறந்து நிதானமாக இருக்க வேண்டிய மாதமாக இது இருக்கும்.
அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த மாதம் உங்களுக்கு சில எதிர்மறை அனுபவங்கள் இருக்கும். நிதானமான பலன்களே இப்போது நடைபெறும். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கும்.. குறிப்பிட்ட சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தரமுடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம்,
செக்யூரிட்டி போன்றவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்திகள் உண்டு. எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு இந்த மாதம்
நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும்.
1,2,3,9,11,12,19,20,21,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி பகல் 11.30 மணி முதல் 7-ம்தேதி மதியம் 3 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில்
நீண்ட தூர பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.
No comments :
Post a Comment