Tuesday, February 2, 2016

விருச்சிகம்: 2016 பிப்ரவரி மாத பலன்கள்

விருச்சிகம்:

மாதத்தின் பிற்பகுதியில் ராசியில் இருக்கும் சனி பகவானுடன் ராசிநாதன் செவ்வாய் இணைவதன் மூலம் ராசி வலுப்பெறுவதால் ராசி வலுப்பெற்றால் சனி தரும் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும் எனும் விதிப்படி இனிமேல் ஏழரைச்சனியின் கெடுபலன் அமைப்புகள் விருச்சக ராசிக்கு தீரத்தொடங்கும் என்பது நிச்சயம். 

இந்த மாதம் நீங்கள் நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும். விருச்சிக ராசிக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. ஆகஸ்டு மாதம் நடைபெறப்போகும் குருப்பெயர்ச்சி மிகவும் அற்புதமான பலன்களை உங்களுக்கு தரும் என்பதல் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும்.

இரண்டாம் வீட்டிற்குடைய குருபகவான் அந்த வீட்டை பார்ப்பதால் தனஸ்தானம் வலுப்பெற்று இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது உங்களுக்கு கிடைக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. இந்த மாதம் பிள்ளைகள் விஷயத்தில் நல்லசெய்திகளும் அவர்களால் பெருமைப் படத்தக்க நிகழ்வுகளும், சுபகாரியங்களும் உள்ள மாதமாக இது இருக்கும்.

மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் இந்த மாதம் சுமாராக தான் இருக்கும் என்பதால் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

3,4,5,8,9,11,12,17,20,21 ஆகிய நாட்களில் பணம் வரும் நாட்கள். 17-ந்தேதி மதியம் 2.30 மணி முதல் 19-ந்தேதி இரவு 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் என்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நீண்ட பிரயாணங்களை தவிர்க்கவும்.

1 comment :