Tuesday, February 2, 2016

துலாம்: 2016 பிப்ரவரி மாத பலன்கள்

துலாம்:

இதுவரை மாதத்தின் பிற்பகுதியில் ராசியில் இருக்கும் செவ்வாய் விலகுவது இதுவரை எந்த விஷயங்கள் உங்களை எரிச்சல் படுத்திக் கொண்டிருந்ததோ அவை அனைத்தும் இனிமேல் உங்களுக்கு சாதகமாக மாறும் அமைப்பை காட்டுத்துவதால் பிப்ரவரி மாதம் துலாம் ராசிக்கு கோபத்தை ஏற்படுத்தாத மாதமாக இருக்கும் என்பது உறுதி.

சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு இனிமேல் கெடுதல்கள் நடக்காது. ராசிநாதனை சனி பார்ப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை.

எட்டாம் வீட்டை சனி செவ்வாய் சேர்ந்து பார்த்து அந்த வீடு வலிமை இழப்பதால் இந்த மாதம் தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு இது நல்ல மாதமாக அமையும். சிறுகலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

1,2,4,5,8,11,13,14,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும் நாட்கள். 15-ந்தேதி காலை 10 மணி முதல் 17-ந்தேதி மதியம் 2.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கியமான முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுப்பதை தவிர்க்கவும்.

No comments :

Post a Comment