பிப்ரவரி மாதத்தில் ராசியில் இருந்த ராகு விலகி விட்டதாலும் ராசிநாதன் புதன் மாதம் முழுவதும் யோகாதிபதி சுக்கிரனுடன் இணைந்து நட்பு வீடுகளில் இருப்பதாலும்
பிப்ரவரி மாதம் கன்னி ராசிக்கு யோகத்தை தரும் மாதமாகவும் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும் மாதமாகவும் இருக்கும்.
மாதம் பிற்பகுதியில் விரயாதிபதியான சூரியன் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்த மாதம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். குறிப்பிட்ட சில கன்னி ராசிக்காரர்களுக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.
ராசிநாதன் பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு இந்த மாதம் பஞ்சம் இல்லை. யார் வீட்டு பணமானாலும் உங்கள் பாக்கெட்டில் தாராளமாக விளையாடும். கணவன்
மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் சில உல்லாச அனுபவங்கள் இருக்கும்.
வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வயதான சிலர் பேரன், பேத்திகளை பார்ப்பதற்காக வெளிநாடு போவீர்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு
இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். கிரகநிலைகள் எல்லா வகையிலும் இந்த மாதத்தில் சாதகமாகவே
இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும் மாதம் என்பதைக் காட்டுகிறது.
4,6,8,9,10,18,19,20,24,25 ஆகிய நாட்கள் பணம் வரும் நாட்கள். 13-ந்தேதி காலை 7 மணி முதல் 15-ந்தேதி காலை 10 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் கவனமாக
இருக்கவும்.
No comments :
Post a Comment