மாதத்தின் பிற்பகுதியில் ராசிநாதன் சூரியன் ஏற்கனவே இருந்த வலுவற்ற நிலை மாறி வலுவான அமைப்பில் அமர்ந்து ராசியை பார்ப்பார் என்பதால் பிற்பகுதி மாதத்தில் சிம்ம
ராசிக்கு இருந்து வந்த பின்னடைவுக்கள் அனைத்தும் மாறி நன்மைகள் இருக்கும் மாதமாக இது இருக்கும். ஐந்தாமிடத்தில் குருவின் பார்வையில் கிரகங்கள் இந்த மாதம்
முழுவதும் இருக்கப்போவது எந்தவித தொல்லைகளும் துயரங்களும் உங்களை இனிமேல் அணுகாது என்பதையும் காட்டுகிறது.
நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும். பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும்
கொண்டவர்களான உங்களுக்கு இந்த மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. பணம் இருந்தால் தானே செலவு செய்ய முடியும். எனவே பணவரவும்,
தனலாபங்களும் இந்த மாதம் உங்களுக்கு நிறைவாகவே இருக்கும்.
நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச்
சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் உண்டு.
இதுவரை நல்ல வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.
சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம்
நடக்கும்.
5,6,7,8,9,16,17,18,21,22 ஆகிய நாட்கள் பணம் வரும் நாட்கள். 11-ந்தேதி காலை 6 மணி முதல் 13-ந்தேதி காலை 7 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் எதிலும்
நிதானமாக இருங்கள்.
No comments :
Post a Comment