பிப்ரவரி மாதத்தில் யோகாதிபதியான செவ்வாய் நல்ல நிலைமையில் இருப்பதும் பிற்பகுதியில் கடக ராசியின் பண வரவிற்கு காரணமான சூரிய பகவான் தன் வீட்டை தானே பார்ப்பதும்
இந்த மாதம் உங்களுக்கு நல்ல பண வரவு இருக்கும் என்பதை காட்டுவதால் பணம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் எனும் விதிப்படி கடகராசிக்காரர்கள் அனைத்தையும் எதிர்
நோக்கி வெற்றிக்கொள்ளும் மாதமாக இது இருக்கும்.
அதே நேரத்தில் இருவேறு எதிர் கிரக நிலைகளை கொண்ட மாதமாக பிப்ரவரி இருப்பதால் இந்த மாதம் அனைத்து விஷயங்களிலும் நன்மைகளும் தீமைகளும் கலந்து நடப்பதோடு தீமைகள்
அனைத்தையும் ராசிநாதன் வலிமையால் சமாளித்தும், ஜெயித்தும் காட்டுவீர்கள் என்பதை பிப்ரவரி உறுதி செய்கிறது.
ஆறாமிடம் வலுப்பெறுவதால் குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேற்றுமைகளுக்கு விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். இரண்டாமிட
ராகுவால் வருங்காலங்களில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வருவதற்கு இடம் இருக்கிறது என்பதால் இப்போதிலிருந்தே அது வராமல் இருக்கக்கூடிய முயற்சிகளை
தம்பதிகள் எடுத்துக் கொள்வது நல்லது.
அடுத்தவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும் என்பதல் யாருக்கும் எதுவும் தருவதாக ப்ராமிஸ் செய்யும் முன் யோசிப்பது நல்லது. குலதெய்வ
வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இந்த நேரங்களில் நிறைவேற்ற முடியும்.
தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் வலுப்பெறுவதால் இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன்
தொல்லைகளால் அவதிப்பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு
வாய்ப்பு இருக்கிறது.
1,2,3,5,8,17,18,19,21,22 ஆகிய நாட்கள் பணம் வரும் நாட்கள். 9-ந்தேதி அதிகாலை 4 மணி முதல் 11-ந்தேதி காலை 6 வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் நீண்ட
பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது.
No comments :
Post a Comment