ராசிநாதன் குருவின் பார்வை பலமும் மாத முற்பகுதியில் பதினொன்றாம் இடத்தில் சுபத்துவத்துடன் அமர்ந்திருக்கும் செவ்வாயின் வலுவும் தனுசு ராசிக்கு மேன்மைகளை
தருவதோடு மூன்றாம் இடத்தில் இருக்கும் கேதுவின் மூலம் உங்களின் செயல் திறனும், மன உறுதியும் அதிகரிக்கும் என்பதால் பிப்ரவரி மாதம் நீங்கள் சாதனைகளை செய்யும்
மாதமாக இருக்கும்.
இந்த மாதத்தின் முதல்பாதியை விட பின்பாதியில் அதிர்ஷ்டகரமான நிகழ்வுகளும் மனம் சந்தோஷப்படும் காரியங்களும் உங்களுக்கு இருக்கும் என்பதால் பிப்ரவரி மாதம்
உங்களுக்கு அதிஷ்டம் தரும் மாதம்தான். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். பழைய கடன்களை
அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். அலுவலகத்தில்
பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.
இரண்டாமிடத்தை செவ்வாய் பார்ப்பது உங்களை கோபப்படுத்தி எரிச்சல் ஊட்டும் சம்பவங்களை நடக்க வைக்கும் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.
உங்களின் ராசிநாதன் குருபகவான் ராசியை பார்ப்பதால் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை. வியாபாரிகளுக்கு இந்த மாதம் சுமாரான நன்மைகள் உண்டு.
கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள்
இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல மாதம்.
1,7,8,9,10,14,15,22,23,24 ஆகிய நாட்கள் பணம் வரும் நாட்கள். 19-ந்தேதி இரவு 9 மணி முதல் 22-ந்தேதி காலை 6 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில்
புது முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். யாருக்கும் ஜாமீன் நிற்க வேண்டாம்.
No comments :
Post a Comment