Tuesday, February 2, 2016

மகரம்: 2016 பிப்ரவரி மாத பலன்கள்

மகரம்:

மாதத்தின் பிற்பகுதியில் பதினொன்றாம் இடத்திற்கு செவ்வாய் மாறுவதும் தர்மகர்மாதிபதிகளான புதனும், சுக்கிரனும் மாதம் முழுவதும் யோகம் தரும் அமைப்பில் இருப்பதும் மகர ராசிக்கு இதுவரை இருந்து வந்த சாதகமற்ற அமைப்புகளை மாற்றி அமைத்து தன லாபங்களையும், பண வரவுகளையும் தர வைக்கும் என்பதால் பிப்ரவரி மாதம் உங்களுக்கு நல்ல மாதமே.

இன்னொரு பலனாக மாதம் முழுவதும் பனிரெண்டாம் இடம் வலுப்பெற்று சுபத்துவமும் அடைவதால் செலவுகள் இருக்கும் மாதமாக பிப்ரவரி மாதம் அமையும். அதே நேரத்தில் செலவு செய்வதற்கு தேவையான பணவரவும் வருமானங்களும் நிச்சயமாக கிடைக்கும் மாதமாகவும் இருக்கும். எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது.

ஆறாமிடத்தை புதன் பார்ப்பதால் தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். உடல் நலத்தில் இந்த மாதம் அக்கறை காட்டவேண்டி இருக்கும். யாரையும் நம்பி வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம்.

அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

வியாபாரிகளுக்கு இது சுமாரான காலகட்டம்தான். வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். அரசு, தனியார்துறை ஊழியர்கள் தங்களுடைய மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு செயல்படுவது நல்லது. சட்டத்தை மீறி யாருக்கும் சலுகைகள் காட்டாதீர்கள். காவல்துறை, சாப்ட்வேர் போன்ற நுணுக்கமான துறைகளில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.

1,3,7,9,12,13,14,15,16,21 ஆகிய நாட்கள் பணம் வரும் நாட்கள். 22-ந்தேதி காலை 6 மணி முதல் 24-ந்தேதி மாலை 4.30 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

No comments :

Post a Comment