Tuesday, February 2, 2016

ரிஷபம்: 2016 பிப்ரவரி மாத பலன்கள்

ரிஷபம்:

மாத முற்பகுதியில் ராசிநாதன் சுக்கிர பகவான் குருவின் வீட்டில் இருந்து குருவின் பார்வையிலும் இருக்கும் நிலை மாறி பிற்பகுதி முழுவதும் ராசியின் யோகாதிபதியான புதனுடன் இணைந்து ஒன்பதாம் வீட்டில் வலுவுடன் இணைந்து ராஜயோகதிபதியான சனியின் பார்வையை பெறுவதால் மாத பிற்பகுதியில் அனைத்து நன்மைகளை செய்யும் மாதமாக இது இருக்கும்.

இந்த மாதம் உங்களின் அனைத்து பிரச்சினைகளும், கஷ்டங்களும் முடிவுக்கு வரும் மாதமாக விடியும். எதிர்கால முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இந்த மாதம் நடைபெறும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும்.

ரிஷபராசி இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள்.

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. தனலாபாதிபதிகள் வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு இந்த மாதம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும்.

1,2,3,8,9,12,13,14,24,25 ஆகிய நாட்கள் பணம் வரும் நாட்கள் 4-ம்தேதி இரவு 7 மணி முதல் 7-ம்தேதி அதிகாலை 1 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்டதூரப் பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது.

No comments :

Post a Comment