மாதத்தின் கடைசி வாரம் வரை ராசிநாதன் செவ்வாய் ராசியை பார்ப்பதும், இதுவரை விரயஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு வீண் செலவுகளையும், வருமானத்திற்கும் மீறிய
விரையங்களையும் கொடுத்து வந்த கேதுபகவான் பதினொன்றாம் இடத்திற்கு மாறியதும் நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் மேஷத்திற்கு நன்மைகளை தரும் மாதம்தான்.
பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. எதிர்பாராத பணவரவு இருக்கும். தந்தைவழியில் நல்ல
சம்பவங்கள் இருக்கும். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள்
துறையினர்கள் மேன்மை அடைவார்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவீர்கள்.
மனம் உற்சாகமாக இருக்கும். முகத்தில் எந்த நேரமும் புன்னகை தவழ காட்சி தருவீர்கள். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான
பொருள் வாங்குவீர்கள். கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம்.
கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்பு முனையாக அமையும்.
ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்.
6,8,9,10,15,22,23,24,25,26 ஆகிய நாட்கள் பணம் வரும் நாட்கள். 2-ம்தேதி காலை 9 மணி முதல் 4-ம்தேதி இரவு 7 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் நெடுந்தூரப்
பிரயாணங்களை விழிப்புடன் மேற்கொள்ளுவது நல்லது.
No comments :
Post a Comment