கைப்பேசி : +91 9768 99 8888
அரசு
ஊழியர்கள், தனியார்துறையினர், நெருப்பு சம்மந்தப்பட்ட தொழில் புரிவோர், பொதுவாழ்க்கையில்
இருப்போர், மக்கள் பிரதிநிதிகள் போன்றவருக்கு பணவரவும், அந்தஸ்து, கௌரவமும் கிடைக்கும்.
நிலுவையில் இருந்த சொத்துப் பிரச்னை சாதகமாக தீரும். தந்தையின் அன்பையும், ஆதரவையும்
பெற முடியும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் ஜாலியான அனுபவங்கள் இருக்கும். படிப்பைத்
தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்வீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். சமுதாயத்தில்
அனைத்து தரப்பு மீன ராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் ஏதேனும் ஒரு வகையில் நன்மைகளை
இருக்கும்.
குடும்பத்துப்
பிரச்னைகளில் பொறுத்துப் போவதன் மூலம் பிரச்னை இருக்காது என்பதால் பொறுமை காட்டுங்கள்.
நவம்பர் முதல் ராசியில் ராகு அமர்வதால் குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். அனாவசியமாக
எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். சிலருக்கு கடல் தாண்டிப் போகும் பயணங்கள் இருக்கும்.
டிராவல்ஸ் தொழில் நடத்துபவர்கள், டிரைவர் போன்ற இயக்கும் தொழில் செய்பவர்களுக்கு இந்த
மாதம் நன்மைகளைத் தரும். சிலருக்கு ஆன்மிக எண்ணங்களும் எதிர்கால முன்னேற்றத்திற்கான
திட்டங்கள் மனதில் வருவதும் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள்
உண்டு. அதிர்ஷ்டம் கை கொடுக்கும். இதுவரை நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான
விஷயங்கள் நிறைவேறும். வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் இருக்காது. வியாபாரம் முன்னேறும் தொழில் சிறக்கும். திருமணம் ஆகாதவருக்கு உறுதி ஆகும்.
சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் இருக்கும்.
2,4,5,8,9,10,18,19
ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ம்தேதி மதியம் 1.11 முதல் 13-ம் தேதி இரவு 9.17 வரை
சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது.
சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில்
எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பதும் நல்லது.

No comments :
Post a Comment