கைப்பேசி : +91 9768 99 8888
நவம்பர்
மாதம் மகரத்திற்கு எவ்வித கெடுபலன்களும் நடக்காத மாதமாக இருக்கும். இந்த மாதம் முதல்
மூன்றில் ராகு அமர்வது அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் வலிமையை தரும். கடந்த
ஐந்து வருடங்களாக வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்சனைகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
தீர்வுக்கான பாதைகள் தெரிய ஆரம்பிக்கும். நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு
சிறப்புக்கள் தேடி வரும். நான்குபேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள்
கெடுபலன்கள் இனிமேல் இருக்காது. எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சில விஷயங்களை இப்போது
செய்வீர்கள்.
நீண்டநாள்
பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும்
இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். குடும்பத்திலும்
சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும். இந்த மாதம் முழுவதும் நல்லபலன்கள் மட்டும்தான் இருக்கும்.
ஒரு சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ முக்கியமான விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும்.
முயற்சி ஸ்தானம் வலுப் பெறுவதால் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை உங்களை
விட்டு விலகும். அனைத்து விஷயங்களிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள்.
ஒரு சிலர் எடுத்துக் கொண்ட காரியங்களை நல்ல விதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள். அடுத்த
சில வாரங்களில் உங்களின் நீண்டநாள் எண்ணங்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
1,2,3,10,11,12,20,23
ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம் தேதி மதியம் 1.22 முதல் 9-ம் தேதி அதிகாலை 2.01 வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம்.
புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.

No comments :
Post a Comment