கைப்பேசி : +91 9768 99 8888
கும்பம்:
அரசியல்வாதிகள் பொறுமையாக இருக்கவேண்டும். இன்னும் சில வாரங்களில் ராகு கேதுக்கள் 2- 8 இல், மாற இருப்பதால் சிக்கல்கள் வரலாம். ஒரு சிலர் பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்களை அனுபவிப்பீர்கள். தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்கிற பழமொழியை மனதில் கொள்பவர்களுக்கு சஞ்சலங்கள் இருக்காது. குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போகவேண்டி இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். ராசியில் சனி இருப்பதால் சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள். எதிலும் நிதானமாக இருங்கள். இந்த மாதம் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும்.
இளைய பருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும், யோகாதிபதி சுக்கிரன் ஏழாமிடத்தில் அமர்ந்து இந்த மாதம் முழுவதும் ராசியை பார்ப்பதால், அனைத்தையும் சமாளிப்பீர்கள். பேச்சில் நிதானத்தைக் காட்டுங்கள். காரணமின்றி கோபம் வரும். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. மாத பிற்பகுதியில் வம்பு, வழக்கு, தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல், வீண்செலவு, அனாவசிய கடன் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். செல்போன் பத்திரம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம். போன்ற சமூக ஊடகங்களில் அறிமுகம் இல்லாதவரிடம். மனம்விட்டு சாட் செய்யாதீர்கள். யாரையும் நம்பாதீர்கள். பணம் கேட்டு வரும். அழைப்புகள், லிங்குகளை உதாசீனப்படுத்துங்கள். குறிப்பாக ஓடிபி விஷயத்தில் இந்த மாதம் கவனம் தேவை.
4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம் தேதி மாலை 6.16 முதல் 15-ம் தேதி காலை 5.21 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :
Post a Comment