Saturday, September 30, 2023

மகரம்: 2023 அக்டோபர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மகரம்:

இந்த மாத இறுதியில் நடக்க இருக்கும் ராகு கேது பெயர்ச்சியின் மூலமாக. உதவிகளை தரக்கூடிய மூன்றாமிடத்திற்கு ராகு மாறுவதால், மகரத்தினரின் பணப் பிரச்சனைகள் இனிமேல் தீர ஆரம்பிக்கும். இளைய பருவத்தினர் வாழ்க்கையில் நல்ல விதமாக செட்டில் ஆகப் போகிறீர்கள். அவரவர்களின் வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றபடி முன்னேற்றங்கள் இருக்கும். கஷ்டங்கள் அனைத்தும் தீரப் போகிறது. துன்பங்களை அனுபவிக்கும்  அனைவரும் வெகு சீக்கிரம் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். அக்டோபர் மாதம் எவ்வித கெடுபலன்களும் நடக்காத மாதமாக இருக்கும். அடுத்த  மாதம் முதல் ராகு நன்மைகளை தரும் இடத்திற்கு மாறுவது, அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் வலிமையை தரும்.

கடந்த ஐந்து வருடங்களாக வாழ்க்கையில் சிக்கல்களையும், பிரச்சனைகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தீர்வுக்கான பாதைகள் தெரிய ஆரம்பிக்கும். நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு சிறப்புக்கள் தேடி வரும். நான்குபேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள் கெடுபலன்கள் இனிமேல் இருக்காது. எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சில விஷயங்களை இப்போது செய்வீர்கள். நீண்டநாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும். இந்த மாதம் முழுவதும் நல்லபலன்கள் மட்டும்தான் இருக்கும். ஒரு சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ முக்கியமான விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும்.

முயற்சி ஸ்தானம் வலுப் பெறுவதால் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை உங்களை விட்டு விலகும். அனைத்து விஷயங்களிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள். ஒரு சிலர் எடுத்துக் கொண்ட காரியங்களை நல்ல விதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள். செவ்வாய் நல்லநிலையில் இருக்கும் அடுத்த சில வாரங்களில் உங்களின் நீண்டநாள் எண்ணங்களையும் லட்சியங்களையும்  நிறைவேற்றிக் கொள்வீர்கள். கலைத் துறையிலும், பொது வாழ்விலும் சாதிக்க துடித்துக் கொண்டிருக்கும் மகர ராசியினருக்கு இந்த மாதம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சமூக ஊடகங்களில் உங்களில் சிலர் சாதனைகளைச் செய்வீர்கள். வேதனைகள் அத்தனையும் தீரப்போகிறது. பணம் வரப்போகிறது. அதன் மூலமாக நிம்மதி கிடைக்கப்போகிறது. குடும்பம் உங்களை மதிக்கப் போகிறது. வேலையில். நீங்கள் யார் என்பதை நிரூபித்து காட்டப் போகிறீர்கள். மொத்தத்தில் மகரத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுகின்ற மாதம் இது.

1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 10 -ம் தேதி அதிகாலை 5.44 முதல் 12 -ம் தேதி மாலை 6.16 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும். 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment