Monday, August 1, 2022

மிதுனம்: 2022 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மிதுனம்:

ஆகஸ்ட் மாதம் முழுவதும் எட்டாம் இடத்தில் சனி அமர்ந்து அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தில்தான் இன்னும் மிதுன ராசி இருக்கிறது. அதே நேரத்தில் மாத பிற்பகுதியில் சுக்கிரன் இரண்டாமிடத்திற்கு மாறி சனியை பார்த்து சுபத்துவப்படுத்துவதால் கடந்த காலங்களில் இருந்ததை போல சாதகமற்ற தன்மைகள் எதுவும் இந்த மாதம் இருக்கப்  போவது இல்லை. அடுத்த வருட ஆரம்பத்திலேயே அஷ்டமச்சனி விலகுவதால் இப்போதிருந்தே உங்களுக்கு சில நல்ல விஷயங்கள் நடந்தே தீர வேண்டும். மிதுன ராசிக்காரர்களுக்கு படிப்படியாக நல்லவைகள் நடக்க ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆயினும் அதை நீங்கள் உணர்வதற்கு நவம்பர் மாதம் ஆகிவிடும் என்பதால் தூரத்தில் கரை தெரிகிறது என்பது போன்ற மன நிலைமையில் இப்போது மிதுனத்தினர் இருப்பீர்கள்.

மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் நல்ல இடங்களில் இருக்கிறார் ஆரம்பத்தில் அதி நட்பு வீடான சிம்மத்தில் அவர் இருப்பதும் மாதத்தின் பிற்பகுதியில் அவர் நான்காமிடத்தில் உச்சநிலையை அடைய போவதும் மிதுன ராசிக்காரர்களுக்கு எல்லாம் இனிமேல் நன்றாக இருக்கப் போகிறது என்பதை சுட்டிக் காட்டுகின்ற ஒரு அமைப்பாக இருக்கும் ராசிநாதன் மிகப் பெரிய வலுவை அடைய போவதால் கடந்த காலங்களில் இருந்து வந்த பண கஷ்டங்கள், மனம் நிம்மதி இல்லாமல் இருந்த நிலை, இதுவரை உங்களுக்கு எது பிடிக்காதோ அது மட்டுமே நடந்து கொண்டிருந்த அமைப்பு அனைத்தும் மிதுன ராசிக்காரர்களுக்கு மாறப்போகிறது. சுருக்கமாகச் சொல்லப் போனால் மிதுனத்தினர் அனைவரும் இனிமேல் நன்றாக இருக்க போகிறீர்கள். என்ன அதை உணர்வதற்கு இன்னும் 2 அல்லது 3 மாதம் ஆகும் அவ்வளவுதான்.

உங்களில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விட்ட குறை தொட்ட குறையாக இப்போது பிரச்சனைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இப்பொழுது வேலை, தொழில் அமைப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் அனுபவமுள்ள பெரியவர்களிடம் எதற்கும் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வது நல்லது. உறவுகள் நட்புகள் எல்லாம் எதிராய் நிற்கும்.. பணம் என்றால் என்னவென்பதை புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த மிதுனத்தினருக்கு சனி இப்போது அடையாளப்படுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார். எது நல்லது, எது கெட்டது என்பது போன்ற சில அனுபவங்கள் உங்களுக்கு இருக்கும். புனர்பூசத்தினர் மட்டும் இன்னும் சிலகாலம் பொறுமை காக்க வேண்டி இருக்கும்.

5,6,7,11,12,13,19,24,25,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ம் தேதி பகல் 2.58 மணி முதல் 12-ம் தேதி மதியம் 2.49 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய ஆரம்பங்கள், முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். கூடுமான வரை நீண்ட பிரயாணங்களை தவிர்ப்பதும் நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment