Monday, August 1, 2022

கடகம்: 2022 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கடகம்:

மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தில் வலுத்து ஆட்சி நிலையில் இருக்கின்ற குருவின் பார்வை கடகத்திற்கு இருக்கிறது.  அதைவிட நல்ல அமைப்பாக, பத்தாம் இடத்தில் தசம அங்காரகா என்கின்ற நிலையில் இருந்தாலும் கூட ராகுவின் இணைவால் வலிமை இழந்திருக்கும் செவ்வாய், மாத பிற்பகுதியில் இருள் தன்மை நீங்கி லாப ஸ்தானமான 11 ஆம் இடத்திற்கு மாறுவது கடக ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அமைப்பு. இதன்மூலம் தற்போது வேலை, தொழில் நிலைகளில் சங்கடங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற கடகத்தினர் அனைவருக்குமே பதினைந்தாம் தேதிக்கு பிறகு பணியிடங்களில் நிம்மதி, பொருள்வரவு, உங்களுடைய பேச்சை மற்றவர்கள் கேட்கின்ற நிலை, தலைமைத் தனம் உறுதிப்படுத்தக்கூடிய தன்மை என அலுவலக இடங்களில் நல்ல விதமான பலன்கள் நடக்கக்கூடிய மாதமாக ஆகஸ்ட் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு இருக்கும்.

குருவின் பார்வை மூன்று, ஐந்தாமிடங்களில் பதிவதால் உங்களுடைய தன்னம்பிக்கை அற்புதமாக செயல்படக்கூடிய மாதம் இது. சிலருக்கு இளைய சகோதர மேன்மை இந்த மாதம் உண்டு. மாத பிற்பகுதியில் புதன் உச்சநிலையை அடைவதால் தம்பி, தங்கைகளை பற்றிய கவலைகள் விலகும். இதுவரை கருத்து வேறுபாடுகளோடு இருந்து வந்த இளைய சகோதர உறவு மாறும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவீர்கள். சகோதரமேன்மை போன்ற நல்லபலன்கள் இந்தமாதம் கடக ராசிக்காரர்களுக்கு இருக்கும்.

ராசிக்கு குரு பார்வை இருப்பதால் இருப்பதால் எதிலும் தனித்து தெரியக்கூடிய நிலை இப்போது கடகத்திற்கு உண்டு. திறமைகளை இளைய பருவத்தினர் நிரூபிக்கின்ற மாதம் இது. ராசியில் சுக்கிரன் வலுவாக குருவின் பார்வையில் இருப்பதால் சிலருக்கு ஒரு நல்ல நட்பு உறவாக மாறும். ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணிற்கு ஆணையும் அறிமுகப்படுத்துகின்ற மாதம் இது. எதிர்பாலினத்தவரிடம் உங்கள் உங்களுடைய விருப்பத்தை தெரிவித்து அவர்களின் சம்மதத்தை உங்களில் சிலர் பெறுவீர்கள் கடக ராசிக்காரர்கள் வெற்றி பெறும் மாதம் இது. பிடிக்காத மேலதிகாரி மாறுதல் ஆவார். வியாபாரம் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ் விவகாரங்கள் பாதகம் தராது. தொழிலாளர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில் அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும். குறிப்பிட்ட பலனாக அரசு அதிகாரிகளின் ஆதரவும் இப்போது உங்களில் சிலருக்கு கிடைக்கும்.

1,8,9,10,15,16,19,21,22,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 12 -ம் தேதி பகல் 2.49 மணி முதல் 14-ம் தேதி மதியம் 4.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள், புதிய ஆரம்பங்கள் எதையும் ஒத்தி வைப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment