ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மிதுனம்:
குருப்பெயர்ச்சி மூலம் எட்டாமிடத்தில் இருந்த சனி, ஒன்பதாம் வீட்டிற்கு வந்து விட்டதால், பெரிய சங்கடங்கள் எதுவும் வந்து விடாத மாதமிது. மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் உச்ச சுக்கிரனின் வீட்டில் இருப்பது தற்போது உங்களுக்கு இருக்கும் பொருளாதார இன்னல்களை குறைக்கும். மிதுன ராசி இளைஞர்கள் தற்போது வேலை, தொழில்களில் சங்கட நிலைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சிலருக்கு தற்போது இருக்கும் வேலை நீடிக்குமா என்பது போன்ற மிகப்பெரிய மன குழப்பங்கள் இருக்கிறது
அதிசார சனிப்பெயர்ச்சி மூலம் அஷ்டமச்சனி கெடுதல்களை
இனி குறைத்துக் கொள்ளும் என்பதால் இனிமேல் எந்த ஒரு நிலையிலும் தொழில் வேலை
வியாபாரம் போன்ற அமைப்புகளில் பெரிய நஷ்டங்கள் வந்து விடப்போவதில்லை ஆகவே இனி மிதுன
ராசிக்காரர்களுக்கு உறுதியாக கெடுதல்கள் இருக்காது. உங்களில் சிலருக்கு இந்த மாதம்
எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் உதவியால் நல்ல திருப்பங்களும் வரவுகளும்
இருக்கும். சிலருக்கு இனி வரப் போகும் நன்மைகளுக்கான ஆரம்பங்களும், அறிமுகங்களும் இப்போது தெரியும். இளைய பருவத்தினருக்கு மே மாதம் மேன்மையை
தரும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் பெண்கள்
விஷயத்தில் நன்மை நடக்கும். நினைக்கும் காரியத்தை சாதித்துக் காட்ட முடியும்.
கடந்த மாதம் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள், சொந்த வாழ்க்கையில் மனஅழுத்தம் தரும் நிகழ்வுகளை எதிர் கொண்டவர்கள், கடன்தொல்லை, வழக்கு போன்றவைகளால் நிம்மதி இழந்தவர்களுக்கு
இனிமேல் நிம்மதி உண்டு. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகும். உடன்
பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும். உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
சிறு ஆரோக்கியக் குறைவு என்றாலும் கூட மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களில் சிலர்
அதிகமாக யோசித்துச் செயல்படும் குணமுடையவர்கள் என்பதால் மனக் குழப்பத்தில்
இருப்பீர்கள். இந்த மாதம் நடக்க இருக்கும் சில மாற்றங்கள் உங்களுக்கு நன்மைகளைத்
தர இருப்பதால் எதிலும் எதிர்மறையாக யோசிக்காமல் நல்லவிதமாக செயல்பட்டு உயர்வுகளை
பெறுங்கள்.
2,5,11,13,15,17,18,24,25,28,30 ஆகிய
நாட்களில் பணம் வரும். 20ம் தேதி காலை 8.45
மணி முதல் 22ம் தேதி காலை 11.12 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம்.
யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment