ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மீனம்: மீன ராசிக்கு யோகக் கிரக நிலைகளே இந்த மாதம் அமைகின்றன. குறிப்பாக மாதம் முழுவதும் சனி, செவ்வாய், சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருப்பது கடன், நோய், எதிர்ப்புகளை விலக்கும் ஒரு அமைப்பு. இந்த நிலையால் உங்களில் சிலருக்கு நீண்டகாலமாக தொல்லைகளை கொடுத்து கொண்டிருக்கின்ற கடன் பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். சிலருக்கு வேலையிடங்களில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடியோடு விலகும். அனைத்திலும் திருப்தியான மாதம் இது. எண்ணியது எண்ணியபடி நடக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.எந்த ஒரு வாய்ப்பையும் வீணடிக்காமல்
முன்னேற வேண்டிய மாதம் இது. சாதகமான கிரக அமைப்புகள் இருப்பதால் தயக்கமும், சோம்பலுமின்றி பரம்பொருளைப் பிரார்த்தித்து நீங்கள் எந்த முயற்சிகள்
எடுத்தாலும் அனைத்தும் வெற்றியாகும்.
சிலருக்கு மறைமுகமான லாபங்களும், எதிர்பாராத உதவிகளும் இருக்கும். உங்களில்
சிலர் புதிய வாய்ப்புகளை அடைவீர்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.
அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் உண்டு. வாழ்க்கைத்துணை
மூலம் சந்தோஷம் உண்டு. சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு
கிடைக்கும். இளையவர்களுக்கு இந்த வருடக் கடைசியில் திருமணம் முடியும். சிலர்
காதலிக்க ஆரம்பித்து தங்களுடைய வாழ்க்கைத்துணையை அடையாளம் காண்பீர்கள்.
கூட்டு வியாபாரத்தில் குறைகளை கண்டவர்கள்
அவை நீங்கி தொழில் முன்னேற்றம் காண்பார்கள். குறிப்பிட்ட ஒரு பலனாக தகப்பனாரின்
ஆரோக்கியம் மேம்படும். தந்தை மகனுக்கு இடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள், பிணக்குகள் நீங்கி தந்தையுடன் இணைவீர்கள்.
நீண்ட நாட்களாக நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அப்பா நிறைவேற்றித்
தருவார். நீங்களே ஒரு நல்ல தகப்பனாக உங்கள் குழந்தைகளுக்கு கேட்பதை செய்து தர முடியும்.
சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பெரியவர்கள்,
மதிப்புமிக்கவர்கள், அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களின் அறிமுகம்
கிடைக்கும். சிலருக்கு அந்தஸ்து உயரும். அதிகார மிக்க பதவிகள் கிடைக்கும்.
அரசியலில் ஏற்றங்கள் உண்டு. தொழிலில் ஏற்றமும்,
லாபமும்
திருப்திகரமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. பெண்களுக்கு இது நல்ல
மாதம். உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொள்வார்.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment