கைப்பேசி : +91 8286 99 8888
கும்பம்:
ராசியிலேயே குரு, புதன் இணைந்திருப்பது இநத மாதம் எதைச் செய்தாலும் கும்பத்தைக் காப்பாற்றும் கிரக அமைப்பு. மாதத்தின் பிற்பாதி நாட்களும் உங்களுக்கு எதிலும் சிக்கல்கள் இருக்காது. குறிப்பாக கடன் தொல்லைகள் இருக்காது. பணவரவு இருக்கும். பிரச்னைகளை சமாளிப்பீர்கள். முற்பகுதியிலும், பின்னாலும் இருவேறு எதிர் கிரக நிலைகளை கொண்ட மாதம் இது என்பதால் அனைத்திலும் நன்மைகளும் தீமைகளும் கலந்து நடக்கும். என்ன இருந்தாலும் ராசிநாதன் வலிமையாக இருப்பதால் எதையும் சமாளித்தும், ஜெயித்தும் காட்டுவீர்கள். ஏடிஏம்மில் பணம் நிரப்புவது போன்று பெரியஅளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள், பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. பருவ வயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். சுக்கிரனின் பலம் நல்லவைகளைத் தரும்.பெரும்பாலான இளைய பருவ கும்பத்தினர்
எதிலும் காலூன்ற முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இளைஞர்கள் ஏழரைச்சனி
காலத்தில்தான் கஷ்டங்களை அனுபவிப்பீர்கள் என்பதால் காதல், கீதல் என்று உங்கள் சக்தியை விரயம் செய்யாமல் படிப்பிலும், வேலையிலும் கவனத்தை செலுத்துவது நல்லது. ஒருசிலர் எதிர்மறை பலன்களை
சந்தித்து குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும்.
செயல்திறன் குறைவுபடும். மன அழுத்தத்திலும் சிலர் இருப்பீர்கள்.
யாரையும் நம்பி வாக்குறுதி கொடுக்க
வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில்
மாட்டாதீர்கள். மாதத்தின் முதல்பாதியை விட பின்பாதியில் அதிர்ஷ்டகரமான
நிகழ்வுகளும் மனம் சந்தோஷப்படும் காரியங்களும் இருக்கும். தேவையின்றி யாரையும்
பகைத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். சகோதரிகளால்
செலவு உண்டு. அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக
இருக்க வேண்டும். பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம்
இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு. மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். உயர்கல்வி
கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment